ஆற்றில் வீசப்பட்ட தெய்வச் சிலைகள்!  கண்டுபிடித்து கரையேற்றிய இஸ்லாமிய இளைஞர்கள்!

ஆற்றில் வீசப்பட்ட தெய்வச் சிலைகள்!  கண்டுபிடித்து கரையேற்றிய இஸ்லாமிய இளைஞர்கள்!

அஸ்ஸாம் மாநிலம்,உதான் போஸ்ம் பர்காட் பகுதியில் உள்ள திரிசூல் ரெஸ்டாரெண்டில் வேலை பார்க்கும் சானு அலி வழக்கம்போல சனியன்று காலை பக்கத்தில் இருக்கும் பிரம்ம புத்திரா ஆற்றில் குளிக்க இறங்கினார்.
காலில் ஏதோ கடினமான பொருள் இடற மூழ்கி பார்த்த சானுவுக்கு அதிர்ச்சி.அங்கே கிடந்தது ஒரு உலோகச் சிவன் சிலை

அஸ்ஸாம் மாநிலம்,உதான் போஸ்ம் பர்காட் பகுதியில் உள்ள திரிசூல் ரெஸ்டாரெண்டில் வேலை பார்க்கும் சானு அலி வழக்கம்போல சனியன்று காலை பக்கத்தில் இருக்கும் பிரம்ம புத்திரா ஆற்றில் குளிக்க இறங்கினார்.

காலில் ஏதோ கடினமான பொருள் இடற மூழ்கி பார்த்த சானுவுக்கு அதிர்ச்சி.அங்கே கிடந்தது ஒரு உலோகச் சிவன் சிலை!

statue

அதை தூக்கிவந்து கரையில் வைத்துவிட்டு லட்சில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல்.தெரிவித்தார்.போலீஸ் வந்த உடன்,சானு அலியோடு,சான் மொகமது,ஷம்ஷுல் அலி என்கிற திரிசூல் ரெஸ்டாரண்ட ஊழியர்கள் இருவரையும் அழைத்து உள்ளே இறங்கித் தேடச்சொல்லியது.

அந்த மூன்று இஸ்லாமிய இளைஞர்களும் ஆற்றுக்குள் இருந்து 29 இந்து தெயவச் சிலைகளையும்,திரி சூலங்களையும்,பூஜைப் பொருட்களையும் கரை சேர்த்தனர்.இதற்குள்,பேரிடர் தடுப்பு பிரிவு  போலீசார் வந்து விட அவர்களும் ஆற்றில் மூழ்கி மேலும் பல பூஜைப் பொருட்களையும் சிலைகளையும் அள்ளி வந்தனர்.

statue

ஆற்றில் இருந்து மீட்கபட்ட பொருட்கள் பற்றிய செய்தி வெளிவந்த சில நிமிடங்களிலேயே சந்தன் நகர் பெல்டோலி பகுதியைச் சேர்ந்த நிரேந்திரக்குமார் சீல் என்பவர் காவல் நிலையத்துக்கு வந்து ஒரு சிலையை அடையாளம் காட்டி,அது தன்னுடைய வீட்டில் இருந்து திருடப்பட்டது என்று சொல்லி இருக்கிறார்.

நிரேந்திரக்குமார் தன் வீட்டில் திருட்டுப் போனது அக்டோப்ர்  18ம் தேதி என்றும் சொல்லி இருக்கிறார். இப்போது சிலைகளைத் திருடிய  கூட்டத்தை அஸ்ஸாம் போலீஸ் தேடிவருகிறது.