ஆற்றில் கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளால் 35 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 

ஆற்றில் கொட்டப்பட்ட ரசாயன கழிவுகளால் 35 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஆற்றில் கொட்டப்பட்ட இரசாயனக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 35 பேர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மலேசியா: ஆற்றில் கொட்டப்பட்ட இரசாயனக் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் பாசிர் கூடாங் மாவட்ட ஆற்றில்  இரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்த விசாரணையில், லாரி ஒன்றிலிருந்து அந்த ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்துள்ளது.  ஒன்றரை கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட கிம்கிம் ஆற்றில் மிகப் பெரிய பகுதி மாசடைந்திருப்பதையும், மீத்தேன் வாயுவைச் அப்பகுதி மக்கள் சுவாசித்ததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து அப்பகுதியிலிருந்த  பள்ளிகளுக்கு மலேசியக் கல்வி அமைச்சகம்,  தேவைப்பட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அவ்விரு பள்ளிகளையும் மூட உத்தரவிடப்படலாம் என்று தெரிவித்துள்ளது.மேலும் அப்பகுதியில் உள்ள 7 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட  அனைவரின் உடல்நிலையும் நன்றாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்  அருகிலுள்ள குடியிருப்பாளர்களை விழிப்புடன் இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து மாசு நிறைந்த ஆற்றில் மீன்பிடிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.