ஆர்யாவின் மகாமுனி படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? 

 

ஆர்யாவின் மகாமுனி படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? 

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

ஆர்யாவின் மகாமுனி படம் எப்போ ரிலீஸ் தெரியுமா? 

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

மௌனகுரு படத்தின் வெற்றியையடுத்து கிட்ட தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு சாந்த குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மகாமுனி. ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து படத்தைப் பற்றி எந்த ஒரு அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. படத்தின் மீதுள்ள ஆர்வத்தைத் தாங்கமுடியாமல் அப்டேட் விடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள், தொழில்நுட்ப பணிகள் போன்றவை முடிந்த நிலையில் படம்  வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.