‘ஆராரிராரோ ராரோ… ராரோ’…: அஜித்தின் விஸ்வாசம் பட பாடல் செய்த சாதனை!

 

‘ஆராரிராரோ ராரோ… ராரோ’…: அஜித்தின் விஸ்வாசம் பட பாடல் செய்த சாதனை!

விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

 சென்னை: விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாத வெளியான படம் விஸ்வாசம்.சிவா இயக்கத்தில் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இதில் நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாகி சுமார் 100 நாட்கள் மேல் வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது.

 இப்படத்தில் இடம் பெற்ற அப்பா-மகள் பாசத்தை வெளிக்காட்டும் விதமான ‘கண்ணான கண்ணே’ பாடல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது. டி.இமான் இசையில், சித் ஸ்ரீராம் குரலில் உருவான அந்த பாடல் கேட்கும் பொது, மகள்களை பெற்ற அப்பாக்களின் கண்களில் கண்டிப்பாகக் கண்ணீர் வழிந்திருக்கும்.

இந்நிலையில் இந்த பாடலில் லிரிக்கல் வீடியோ யூடியூபில் சாதனை படைத்துள்ளது. ஆம்… இதுவரை 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. அதை மகிழ்ச்சியாக #70MViewsForKannaanaKanney என்ற ஹாஸ் டாக் மூலம் சத்யா ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ளது. அந்த ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.