ஆரத்தி எடுக்க முண்டியடித்த பெண்கள்: கை விரலை இழந்த பாஜக அமைச்சர்!

 

ஆரத்தி எடுக்க முண்டியடித்த பெண்கள்: கை விரலை இழந்த பாஜக அமைச்சர்!

பாஜக  அமைச்சர் தேவ் சிங்கின் கை விரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆரத்தி எடுக்க முண்டியடித்த பெண்கள்: கை விரலை இழந்த பாஜக அமைச்சர்!

 முஷாபர்நகர்: பாஜக  அமைச்சர் தேவ் சிங்கின் கை விரல் துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவரும் அமைச்சராகவும் இருப்பவர் ஸ்வந்தந்தரா தேவ் சிங்.  இவர் நேற்று முஷாபர்நகரில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொள்ளச் சென்றார். அவரை வரவேற்கப் பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஆரத்தி எடுக்க பெண்கள்  முண்டியடித்தனர். கூட்ட நெரிசல் மத்தியில் இறங்கிய ஸ்வந்தந்தரா தேவ் சிங்கின் வலது கை  சுண்டுவிரல் கார் கதவில் சிக்கி துண்டானது. இதைச் சற்றும் எதிர்பாராத அவர் வலியால் துடித்தார்.

பின்னர் அங்கிருந்த தொண்டர் ஒருவர் ஸ்வந்தந்தரா தேவ் சிங்கின் விரலை தேடி எடுத்தார். ஆனால்  அவர் அணிந்திருந்த மோதிரம் காணாமல் போயுள்ளது. 

இதையடுத்து  அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அறுவை சிகிச்சை செய்து அவரது கை விரலை ஒட்டவைக்க மருத்துவர்கள் முயன்ற நிலையில் விறல் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்ததால் அதற்குச் சாத்தியமில்லை என்று கூறி மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை  உண்டாக்கியது.