ஆயிரக் கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர் கண்காட்சி… கொரோனாவால் மூடப்பட்ட பூங்கா!

 

ஆயிரக் கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர் கண்காட்சி… கொரோனாவால் மூடப்பட்ட பூங்கா!

நூற்றுக் கணக்கான வகையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் தற்போது ஊட்டியில் பூத்துக் குலுங்குகின்றன. 

ஆண்டுதோறும் கோடைவிழாவின் முக்கிய விழாவான ஊட்டி மலர்கண்காட்சி வெகு விமர்சையாக நடைபெறும்.  ஆயிரக் கணக்கான மக்கள், கோடை வெயியில் இருந்து தப்பிக்க ஊட்டிக்கு வந்து விடுவார்கள். அதே போல இந்த ஆண்டும் மலர்கண்காட்சியை நடத்த கடந்த டிசம்பர் மாதம் முதல் மலர்கள் நடவுப்பணிகள் நடைபெற்று வந்தது. மே 15 ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கவிருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் இருப்பதால், 124 ஆவது மலர்கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட நூற்றுக் கணக்கான வகையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் தற்போது ஊட்டியில் பூத்துக் குலுங்குகின்றன. 

ttn

ஊழியர்களின் ஊழைப்பால் பூத்துக் குலுங்கும் அந்த மலர் கண்காண்சி பூங்கா  மூடப்பட்டுள்ளதால் யாரும் பார்க்க முடியவில்லை. ஆனால் ஊழியர்களின் உழைப்பை வீணாக்க விரும்பாத நிர்வாகம், வீடியோ காணொளி மூலமாகவும் போட்டோ ஆல்பம் தயாராகி வருகிறதாம். மேலும், ஒரு சில நாட்களில் இந்த வீடியோ அரசு அனுமதியுடன் வெளியாகும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

இது குறித்து பேசிய அதிகாரி, ஊட்டியில் 123 ஆண்டுகளாக மலர் கண்காண்சி நடந்து வந்தது. இதனை காண பல நாடுகளில் இருந்து லட்சக் கணக்கான மக்கள் குவிவார்கள். இதனால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும். கடந்த 2000 ஆம் ஆண்டு தேயிலை தொழிலாளர்கள் போராட்டத்தால் ரத்து செய்யப்பட்டது. அப்போதும், சுற்றுலா பயணிகள் மலர் அலங்காரங்களை கண்டு மகிழ்ந்தனர். ஆனால் கொரோனா வைரஸால் மலர் கண்காட்சி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது இது தான் முதல் முறை ஆகும் என்று கூறியுள்ளார்.