ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி வசதி நீட்டிக்க முடிவு

 

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி வசதி நீட்டிக்க முடிவு

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி எடுக்கும் வசதி நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கலிபோர்னியா: ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் இ.சி.ஜி எடுக்கும் வசதி நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது வாட்ச் சீரிஸ் 4 மாடலை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. புதிய சீரிஸ் 4 வாட்ச் மாடல்களில் அனைவரையும் கவர்ந்த அம்சங்களில் ஒன்றாக இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் அம்சம் இருந்தது. ஆனால், இந்த அம்சம் பயனர்களின் வாட்ச் ஓ.எஸ் இயங்குதளத்தில் 14 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இந்நிலையில், இதன் வேலிடிட்டி காலத்தை 45 நாட்களுக்கு நீட்டித்து ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  

இந்நிலையில், வாட்ச் ஓ.எஸ் 5.1.2 பதிப்பில் இ.சி.ஜி. வசதி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் விற்பனை மைய பயிற்சி அறிக்கைகளில், வாட்ச் ஓ.எஸ். 5.1.2 பதிப்பில் ஆப்பிள் வடிவமைத்த இ.சி.ஜி ஆப் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செயலி பயனர்களின் இதய துடிப்பை டிராக் செய்து, இதய ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை வழங்கும்.

இந்த அம்சம் வழங்கப்பட்ட பின்பு, பயனர்கள் தங்களது புதிய ஆப்பிள் வாட்ச் டிஜிட்டல் கிரவுனை தொட்டு இ.சி.ஜி. சென்சாரை ஆக்டிவேட் செய்யலாம். அதன் பின்னர் இ.சி.ஜி. பரிசோதனை அறிக்கை 30 நொடிகளில் ஆப்பிள் வாட்ச் திரையில் தெரியும். இதோடு பயனரின் இதய துடிப்பை சீரான இடைவெளியில் வாட்ச் தானாக டிராக் செய்து கொண்டிருக்கும்.

பயனரின் ஆரோக்கிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டு முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. பயனர்கள் தங்களது இ.சி.ஜி பரிசோதனை அறிக்கையை மருத்துவர்களுடன் பி.டி.எஃப். வடிவில் பகிர்ந்து கொள்ள முடியும். வாட்ச் ஓ.எஸ். 5.1.2 இயங்குதளம் தற்சமயம் பீட்டா முறையில் சோதனை செய்யப்படுகிறது.