ஆபாச வீடியோ, புகையிலை, வன்முறை விளையாட்டு; இந்தியர்கள் தடை விதிக்க விரும்பும் விஷயம் எது?

 

ஆபாச வீடியோ, புகையிலை, வன்முறை விளையாட்டு; இந்தியர்கள் தடை விதிக்க விரும்பும் விஷயம் எது?

இந்தியர்கள் தடை விதிக்க அதிகம் விரும்பும் விஷயம் எது என்பது குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

புதுதில்லி: இந்தியர்கள் தடை விதிக்க அதிகம் விரும்பும் விஷயம் எது என்பது குறித்த ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

புகையிலை, சிகெரெட், மது, சமூக வலைத்தளங்கள், வன்முறையை தூண்டும் விளையாட்டுகள், ஆபாச இணையதளங்கள் என இன்றைய இளசுகளை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பல்வேறு விஷயங்கள் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளன.

tik tok

இணையதளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகின்றன. இந்த இணையதளங்களுக்கு சில நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கு தடை எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, 800-க்கு மேற்பட்ட ஆபாச இணையதளங்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தடை விதிக்கப்பட்டது.

adult videos

அதேபோல், பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு வீடியோக்கள் எடுக்கவும், வெளியிடவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ப்ளூவேல் உள்ளிட்ட அஆபத்தான விளையாட்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் டிக் டாக் செயலியை பலர் தவறாக பயன்படுத்துவதாக கூறி அதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர், சில நிபந்தனைகளோடு அதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

அதேசமயம், ராக்கெட் வேகத்தில் பரவி வரும் பப்ஜி எனும் வன்முறையை தூண்டும் விளையாட்டு, எலெக்ட்ரானிக் சிகெரெட், மது, புகையிலை, சூதாட்டம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு தடை இல்லை. இருப்பினும், அவை அனைத்தும் தடை செய்வதற்கான பரிசீலனையில் உள்ளது. குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி விளையாடியதாக சுமார் 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

vaping

எலெக்ட்ரானிக் சிகரெட்டினால் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுவதாக கூறி அதனை தடை செய்ய வலியுறுத்தி, சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. இதையடுத்து, 12 மாநிலங்களில் இதற்கு தடை விதிக்கப்பட்டாலும், நாடு முழுவதும் முழுமையான தடை இதுவரை இல்லை.

இந்நிலையில், பிரான்சை தலைமையிடமாக கொண்டு செயல்படும், உலக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Ipsos, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இந்தியர்களிடம் தடை விதிக்க அதிகம் விரும்பும் விஷயம் எது என்பது குறித்த ஆய்வை ஆன்லைனில் நடத்தியது.

tobacco

அதன் முடிவுகளில், புகையிலை/சிகெரெட்டுகளை தடை செய்ய 44 சதவீதம் பேரும், கஞ்சாவை தடை செய்ய 42 சதவீதம் பேரும், எலெக்ட்ரானிக் சிகெரெட்டுகளை தடை செய்ய 42 சதவீதம் பேரும், வன்முறையை தூண்டும் விளையாட்டுகளை தடை செய்ய 40 சதவீதம் பேரும், ஆன்லைன் சூதாட்ட தடைக்கு 39 சதவீதம் பேரும், கேசினோ சூதாட்ட தடைக்கு 35 சதவீதம் பேரும், ஆபாச வீடியோக்களை தடை செய்ய 34 சதவீதம் பேரும், மதுவை தடை செய்ய 24 சதவீதம், ஆன்லைன் டேட்டிங் தடைக்கு 20 சதவீதம், பீர் மற்றும் வைன் தடைக்கு தலா 18 சதவீதம் பேரும், சமூக வலைதளங்களை தடை செய்ய 5 சதவீதம் பேரும், சாக்லெட்டை தடை செய்ய 2 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.