ஆபாச வீடியோக்களை பரப்பும் ‘3 குழுவினர்’ : தமிழ்நாடு போலீஸ் ஸ்கெட்ச் !

 

ஆபாச வீடியோக்களை பரப்பும் ‘3 குழுவினர்’ : தமிழ்நாடு போலீஸ் ஸ்கெட்ச் !

குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பார்ப்பதிலும், பகிருவதிலும் தமிழகம் தான் முதலிடம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பார்ப்பதிலும், பகிருவதிலும் தமிழகம் தான் முதலிடம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு அறிக்கை அனுப்பியது. குழந்தைகள் பற்றிய ஆபாசவீடியோக்களை பார்க்கும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதன் பட்டியல் தயாராகி வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி எம்.ரவி தெரிவித்திருந்தார். 

ttn

இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஏ.டி.ஜி.பி எம்.ரவி, குழந்தைகள் குறித்த ஆபாசப் படங்களைப் பார்ப்பதும் அதனைப் பதிவிறக்கம் செய்து பகிர்வதும் சட்டப்படி குற்றமாகும். அதுமட்டுமின்றி, அதனை லேப்டாப் மற்றும் செல்போன்களில் வைத்திருப்பதும் குற்றம். இவ்வாறு செய்பவர்கள் போக்சா சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

ravi

தற்போது, குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பரப்பும் 3 குழுவினரைக் கண்டு பிடித்துள்ளோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகப் பொதுமக்களின் செல்போன் மற்றும் இணையப் பயன்பாட்டை காவல்துறை கண்காணிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். விரைவில் அந்த 3 குழுவினர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.