ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய நபரை வசமாக மாட்டிவிட்ட ஷாலு ஷாமு 

 

ஆபாச புகைப்படங்கள் அனுப்பிய நபரை வசமாக மாட்டிவிட்ட ஷாலு ஷாமு 

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் காதலியாக நடித்துப் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதைத்தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார்.அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காததால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

சமீபத்தில் இவர் தனது ஆண் நண்பருடன் கவர்ச்சியாக நடனமாடியுள்ள வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் அதிலிருந்து தன்னிடம் சில பேர் ஆபாசமாகப் பேசிவருவதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தார். 

இந்த நிலையில் இதுபோன்ற ஆபாச பேச்சுகளைத் தடுக்க ஷாலு ஒரு முடிவு எடுத்துள்ளதாகத் தனது சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இனிமேல் எனக்கு யாரேனும் தவறாக மெசேஜ் செய்தால் அதை உடனே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் எச்சரித்தும் ஆபாச புகைப்படங்களையும், ஆபாச மெசேஜ்களையும் சிலர் அனுப்பியுள்ளனர். 

shalu

அதனால் கடுப்பான ஷாலு, தான் சொன்னது போல் ஆபாச மெசேஜ் அனுப்பிய நபரின் புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் பதிவிட்டுள்ளார். ஷாலுவின் இந்த துணிச்சலான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.