‘ஆபாச படம் பார்க்கவே கூடாது சொல்லிட்டு இருக்கோம்; இதுல இது வேற பண்ணுறீயா’ : அதிமுக பிரமுகரை தட்டி தூக்கிய போலீசார்!

 

‘ஆபாச படம் பார்க்கவே கூடாது சொல்லிட்டு இருக்கோம்; இதுல இது வேற பண்ணுறீயா’ : அதிமுக பிரமுகரை  தட்டி  தூக்கிய போலீசார்!

சிறார் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றம் என்று அறிவித்துள்ள போலீசார் அதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிறுமியிடம் ஆபாச  படங்களை காட்டி தொல்லை கொடுத்து வந்த 68 வயதான அதிமுக பிரமுகரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 

சிறார் ஆபாச படங்களை பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது குற்றம் என்று அறிவித்துள்ள போலீசார் அதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில்  வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்  பாளையம் என்ற ரவி. இவர்  அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ttn

இந்நிலையில் ரவி அதேபகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்த வந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஆபாச படங்களை காட்டி  பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை பார்த்த ஒருவர் இதுகுறித்து குழந்தைகள் உதவி மையத்திற்குத் தகவல் தெரிவிக்க அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

ttn

இதை தொடர்ந்து  சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாதங்களாக ரவி இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து ரவியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து பாளையம் ரவியை போக்சோ சட்டத்தில்  போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.