ஆபாச படம் எடுத்து 100 பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! மாணவிகள் முதல் பெண் டாக்டர் வரை சீரழித்த கயவன் கைது !!

 

ஆபாச படம் எடுத்து 100 பெண்களை மிரட்டி பணம் பறிப்பு ! மாணவிகள் முதல் பெண் டாக்டர் வரை சீரழித்த கயவன் கைது !!

சென்னை மற்றும் கன்னியாகுமரியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துவந்த பட்டதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணேசபுரத்தை சேர்ந்த கோழிக் கடை உரிமையாளரான காசி என்பவருக்கு வயது 26. பைக், கூலிங் கிளாஸ் என நகர்வலம் வந்து பெண்களுக்கு மன்மத அம்பு விட்டு மயக்குவதே வேலை. சென்னையில் பி.ஏ. படிக்கும்போது ஒரு பெண் டாக்டருடன் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். உல்லாசமாக இருந்த காட்சிகளை அந்த பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவும் எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர் நாகர்கோவிலுக்கு வந்துவிட்ட காசி பெண் டாக்டரை அடிக்கடி மிரட்டியுள்ளார்.

tiktok-hero-89

பணம் தரவில்லை என்றால் தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுவதாக மிரட்டி உள்ளார். இதற்கு பயந்த அந்த பெண் டாக்டர் காசிக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து காசி பலமுறை டார்ச்சர் செய்துள்ளார். பணத்தையும் இழந்துவிட்ட பெண் டாக்டர் இனிமேல் பணம் தரமுடியாது என கூறிவிட, போலி பெயரில் டிவிட்டர், பேஸ்புக் கணக்குகளை துவங்கி அதில் ஆபாச படங்களை பதிவேற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தந்துள்ளார்.

kasi-suji

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். காசிக்கு சுஜி என்ற மற்றொரு பெயர் உண்டு.  பேஸ்புக்கில் பெண்ணியம் குறித்த பதிவுகள் போடவே இதை பார்த்து பல பெண்கள் மயங்கி உள்ளனர். பின்னர் எப்படியாவது அவரிடம் பழகி நெருக்கமாக இருந்து அதை வீடியோ எடுத்து விடுவாராம். பின்னர் அதை வைத்து பணம் கேட்டு மிரட்டுவாராம். அவருடைய செல்போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது கிட்டத்தட்ட 100 பெண்களின் ஆபாச படங்கள், வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில் பள்ளி மாணவிகளும் ஏராளமானோர் காசியிடம் சிக்கி சீரழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காசி முதல் நாள் மிரட்டும்போதே அதற்கு பயப்படாமல் போலிசில் புகார் அளித்திருந்தால், 5 லட்சம் ரூபாய் இழந்திருக்க மாட்டார். ஆபாச வீடியோக்களும் இணையதளத்தில் வந்திருக்காது.