ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பெண்கள் கண்ணீருடன் புகார்!!

 

ஆபாச இணையத்தில் பெண்களின் டிக் டாக்..! 28 பெண்கள் கண்ணீருடன் புகார்!!

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டிக்டாக்கில் தங்கள் நடன மற்றும் நடிப்புத் திறமைகளை வெளிப்படுத்தி வீடியோ பதிவிட்ட 28 குடும்ப பெண்களின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பகிரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மியூசிக்கலி என்ற பெயரில் முதலில் அறிமுகமாகி பிரபலமான செயலி தான் டிக்டாக். திரைப்பட வசனங்கள், பாடல்களுக்கு ஏற்ப நடித்து வாயசைத்து பிரபலமானார்கள் பல சாமானியர்கள்.

தொடக்கத்தில் புதிதாக பாடல்கள் பாட, நடிக்க  விரும்புபவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஆபாசமான வகையில் அதை பயன்படுத்தத் தொடங்கினர் மக்கள், அந்த விடீயோக்களுக்கு வரும் கமெண்ட்களும் உச்சகட்ட அபாசத்திற்கு செல்லத் தொடங்கின. இதையடுத்து டிக்டாக் செயலி கலாச்சாரத்தை சீரழிப்பதாக கூறி அதனை நீக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்தனர். 

டிக்டாக்

இந்த நிலையில், டிக் டாக்கில் லைக்குகளை பெறவேண்டும் என்பதற்காக துப்பாட்டாவை தூக்கி எரிந்துவிட்டு ஆபாச உடைகளுடன் வீடியோ பதிவிட்ட குடும்பப் பெண்கள் சிலரின் வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் மட்டும் 28 குடும்பப் பெண்களின் டிக்டாக் வீடியோக்களை சமூக விரோதிகள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். 

இதையறிந்த சம்பந்தப்பட்ட பெண்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து காவல்துறையினரை அணுகி ஆபாச இணையதளங்களில் இருந்து அந்த வீடியோவை மட்டும் நீக்க நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்து வருகின்றனர்.

டிக்டாக்

 28 பேரின் டிக்டாக் அக்கவுண்ட்களை உடனடியாக டெலிட் செய்யக்கோரி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். புகார் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆபாச இணையதளங்களில் அந்த வீடியோக்கள் நீக்கப்படுவதற்கு இன்னும் சில தினங்கள் ஆகும் என சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.