ஆபாசப் பட விவகாரத்தில் முதன் முதலாகத் திருச்சியில் ஒருவர் கைது.. போலீசார் அதிரடி !

 

ஆபாசப் பட விவகாரத்தில் முதன் முதலாகத் திருச்சியில் ஒருவர் கைது.. போலீசார் அதிரடி !

குழந்தைகள் பற்றிய ஆபாசவீடியோக்களை பார்க்கும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதன் பட்டியல் தயாராகி வருவதாகவும் ஏ.டி.ஜி.பி எம்.ரவி தெரிவித்திருந்தார். 

குழந்தைகளின் ஆபாசப் படங்கள் பார்ப்பதிலும், பகிருவதிலும் தமிழகம் தான் முதலிடம் எனத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதன் பின்னர், குழந்தைகள் பற்றிய ஆபாசவீடியோக்களை பார்க்கும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அதன் பட்டியல் தயாராகி வருவதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி எம்.ரவி தெரிவித்திருந்தார். 

ttn

 மொத்தமாக 6500 பேர் ஆபாசப் படங்கள் பார்க்கும் பட்டியலில் இருப்பதாகவும், அதில் அதிகமாகக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், அரசியல் பிரபலங்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது.

ttn

இது குறித்துப் பேட்டியளித்த ஏ.டி.ஜி.பி எம்.ரவி, ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. அதனைப் பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாகக் குழந்தைகள் பற்றிய ஆபாசப் படங்களைப் பகிருபவர்களைக் கண்காணித்து வருகிறோம். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். 

ttn

இந்த விவகாரத்தில், திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர், பேஸ்புக்கில் போலிக் கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் குழந்தைகள் பற்றிய ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்துள்ளார். இது குறித்து  எழுந்த புகாரில் கிறிஸ்டோபரைக் கைது செய்த காவல்துறையினர் திருச்சி நீதி மன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். ஆபாச வீடியோ பகிருபவர்கள் திருச்சி மாவட்டத்தில் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.