ஆன்லைன் வர்த்தக நிறுவன அதிரடி சலுகைகளுக்கு கிடுக்குப்பிடி

 

ஆன்லைன் வர்த்தக நிறுவன அதிரடி சலுகைகளுக்கு கிடுக்குப்பிடி

இந்தியாவில் அசூர வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் வர்த்தக முறையை ஒழுங்குபடுத்தும் விதமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் அசூர வளர்ச்சி அடைந்து வரும் ஆன்லைன் வர்த்தக முறையை ஒழுங்குபடுத்தும் விதமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

இந்தியாவில் அசூர வேகத்தில் வளர்ச்சி அடைந்துவரும் ஆன்லைன் வர்த்தக முறையில், அதிக லாபம் ஈட்டுவது வெளிநாட்டு நிறுவனங்களே என்ற பார்வை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஏனெனில், குறிப்பிட்ட சில பொருட்களை குறிப்பிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் மட்டுமே விற்கும் வகையில் தயாரிப்பு நிறுவனங்களுடன், வளர்ந்த ஆன்லைன் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. 

இதன்மூலம், சில நிறுவனங்களில் மட்டுமே குறிப்பிட்ட பொருட்கள் கிடைக்கும் நிலை உருவாகி இருப்பதால், எஞ்சிய வளரும் நிறுவனங்கள் வியாபாரத்தில் பின்தங்கி விடுகின்றன. அதுமட்டுமின்றி, இதுபோன்ற காரணங்களால் உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

amazon

இது போன்ற காரணங்களால், ப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இந்திய ஆன்லைன் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

அந்த புகாரை விசாரித்த, மத்திய வர்த்தக அமைச்சகம், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, “எந்த ஒரு நிறுவனமும் தனது உற்பத்தி பொருளில் 25 சதவிகிதத்தை மட்டுமே ஆன்லைனில் விற்க வேண்டும். மற்றவற்றை வெளிச்சந்தைக்கு விட வேண்டும்.

குறிப்பிட்ட பொருள் இந்த ஆன்லைன் நிறுவனத்தில் மட்டும் தான் கிடைக்கும் என விளம்பரம் செய்ய கூடாது. அதுபோன்ற நிலையையும் உருவாக்க கூடாது. எந்த ஒரு தயாரிப்பாக இருந்தாலும் எல்லா ஆன்லைன் நிறுவனங்களிலும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

தள்ளுபடி விலைகளை அறிவிக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சலுகை என்பது போன்ற அறிவிப்புகளையும் வெளியிட கூடாது” என புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு வகுத்துள்ளது. மேலும், இந்த புதிய கட்டுப்பாடுகள், வருகிற பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.