ஆன்லைன் மோசடியில் 1 லட்சத்தை  இழந்த பெங்களூரு பொறியாளர் “இரும்பு திரை” படத்தை உண்மையாகும்  இணைய தள  குற்றங்கள் .

ஆன்லைன் மோசடியில் 1 லட்சத்தை  இழந்த பெங்களூரு பொறியாளர் “இரும்பு திரை” படத்தை உண்மையாகும்  இணைய தள  குற்றங்கள் .

சைபர் குற்றவாளிகள் பெங்களூரு வாசிகளையே தொடர்ந்து குறி வைத்து தாக்குகிறார்கள் ,சமீபத்தில் online food ஆர்டரில் மோசடி ,ATM ல் பணம் எடுத்துவிட்டு வரும்போது refund க்காக போன் செய்வதுபோல மோசடியை தொடர்ந்து அரசு RTO வெப்சைட்டில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும்போது 1 லட்சத்தை நூதனமான முறையில் பறித்த online கிரிமினல்கள் .

crime

பெங்களூருவில் நவம்பர் 26 ம் தேதி ராஜேந்திரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது )என்ற பொறியாளர் தன்னுடைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க K .R.புரம்   RTO இணைய தளத்தில் இருந்த உதவி எண்ணை (+91-8144910621)அணுகியபோது ஒருவர் தான் RTO அலுவலக  ஊழியர் என்று ராஜேந்திரனிடம் ஹிந்தியில் பேசினார் .அவர் சொன்னபடி ஆன்லைனில் செயல்பட்டு   OTP எண்ணையும் அவருக்கு அனுப்பினார் ,நவம்பர் 27 ன் தேதி ராஜேந்திரன் தன்னுடைய அக்கௌன்ட்டை சோதித்த போது ரூபாய் 89993- google pay மூலம் அறிமுகமில்லாத அக்கௌண்டுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார் .

computer

அரசு RTO இணையத்தளத்திலேயே எவ்வாறு இப்படி நடக்கிறது என்று அவர் வேதனைப்பட்டார் .
வெறும் OTP மூலம் தன்னுடைய கணக்கிலிருந்து கூகுள் பே மூலம் பணம் கையாடப்பட்டிருப்பது கண்டு அருகிலுள்ள காவல் நிலையத்தில் ராஜேந்திரன் புகார் தந்தார் ,அந்த புகார் சைபர் கிரைமுக்கு மாற்றப்பபட்டு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது ,கூடிய விரைவில் IP மூலம் குற்றவாளியை பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்