ஆன்லைன் மது வாங்க ஆசை: தொடர்ந்து மூன்று முறை ஏமாந்து ரூ.1.27 லட்சத்தைப் பறிகொடுத்த பொறியாளர்!

 

ஆன்லைன் மது வாங்க ஆசை: தொடர்ந்து மூன்று முறை ஏமாந்து ரூ.1.27 லட்சத்தைப் பறிகொடுத்த பொறியாளர்!

கர்நாடக மாநிலம் யெலெனஹள்ளியைச் சேர்ந்தவர் அர்ஜுன் ஜெகநாதன். சாஃப்ட்வேர் இன்ஜீனியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்த ஆசைப்பட்ட அவர், ஆன்லைனில் யாராவது மதுவை டோர் டெலிவரி செய்கிறார்களா என்று இணையத்தில் தேடியுள்ளார். அப்போது ஒரு கடை வீடு தேடிவந்து மது வகைகளை டெலிவரி செய்வதாக குறிப்பிட்டிருந்தது.

மதுவை டோர் டெலிவரி செய்வதாக கூறிய நபரிடம் கிரெடிட் கார்டு விவரங்களைக் கூறி சாஃப்ட்வேர் இன்ஜீனியர் ஒருவர் ரூ.1.27 லட்சத்தைப் பறிகொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கர்நாடக மாநிலம் யெலெனஹள்ளியைச் சேர்ந்தவர் அர்ஜுன் ஜெகநாதன். சாஃப்ட்வேர் இன்ஜீனியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்த ஆசைப்பட்ட அவர், ஆன்லைனில் யாராவது மதுவை டோர் டெலிவரி செய்கிறார்களா என்று இணையத்தில் தேடியுள்ளார். அப்போது ஒரு கடை வீடு தேடிவந்து மது வகைகளை டெலிவரி செய்வதாக குறிப்பிட்டிருந்தது.

online-delivery

உடனே அந்த எண்ணைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் அர்ஜுன் ஜெகநாதன். மொத்தம் ரூ.1500க்கு மது வகைகளை ஆர்டர் செய்தார். அப்போது கடைக்காரர், பணத்தை ஆன்லைனில் இப்போதே செலுத்த வேண்டும். பலரும் மது வாங்கிவிட்டு பணம் தராமல் ஏமாற்றுகிறார்கள் என்பதால் கேஷ் ஆன் டெலிவரி கிடையாது என்று கூறியுள்ளார். 
மேலும் பேடிஎம், ஜிபே போன்ற வசதிகள் இல்லை என்றும், கிரெடிட், டெபிட் கார்டு விவரங்களை சொல்லி பணம் செலுத்தினால் ஃப்ரீ டெலிவரி செய்வதாக கூறியுள்ளார். இதை ஜெகநாதன் நம்பி, தன்னுடைய கிரெடிட் கார்டு விவரங்களை ஷேர் செய்துள்ளார். அதன்படி அவர் அக்கவுண்டில் இருந்து ரூ.6000ம் டெபிட் செய்யப்பட்டது. 

online-scam-01

எதற்காக ரூ.1500-க்கு பதில் ரூ.6000ம் டெபிட் செய்யப்பட்டது என்று ஜெகநாதன் கேட்டுள்ளார். அதற்கு அவர், தவறுதலாக டெபிட் ஆகிவிட்டது. ஆனால், டிரான்சாக்‌ஷன் முழுமை பெறவில்லை. உங்கள் அக்கவுண்டுக்கு பணம் வந்துவிடும் என்று கூறியுள்ளார். மீண்டும் டிரை செய்ய வேண்டும், அப்போதுதான் மது பானம் வீடு தேடி வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பணத்தை எடுக்க ஜெகநாதன் ஒப்புக்கொண்டார். இந்த முறை அவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.78,742 எடுக்கப்பட்டது. இப்போதும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தவறாக பணம் எடுக்கப்பட்டது என்று கடைக்காரர் கூறியுள்ளார். அப்போது கூட ஜெகனாதனுக்கு தான் ஏமாற்றப்படுகிறோம் என்பது புரியவில்லை. 
மூன்றாவது முறையாக பணத்தை எடுக்க வேண்டும் என்று கடைக்காரர் கூறியுள்ளார். உங்கள் பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்துவிடும். வரவில்லை என்றால், நான் என் பணத்தைத் தந்துவிடுகிறேன் என்று நம்பும் அளவுக்கு கடைக்காரர் பேசினாராம். இதனால் ஏமாந்த ஜெகநாதன் மூன்றாவது முறையாக பணத்தை எடுக்க ஒப்புக்கொண்டார். இப்போது அவருடைய கணக்கிலிருந்து ரூ.49,001 எடுக்கப்பட்டது. அதன் பிறகு அந்த எண் சுவிட் ஆஃப் செய்யப்பட்டது. 

online-scam-03

எப்படியாவது மது அருந்திவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்த ஜெகநாதனுக்கு பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார். இவ்வளவு ஏமாளியாக இருப்பார்களா என்று ஆச்சரியமடைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜெகநாதனை ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர்.