ஆன்லைன் சேல்ஸ் மற்றும் ஹோம்டெலிவரிக்கு அனுமதி கொடுங்க… மதுபான நிறுவனங்கள் கோரிக்கை

 

ஆன்லைன் சேல்ஸ் மற்றும் ஹோம்டெலிவரிக்கு  அனுமதி கொடுங்க… மதுபான நிறுவனங்கள் கோரிக்கை

ஊரடங்கால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், ஆன்லைன் சேல்ஸ், போன் கால் மற்றும் ஹோம்டெலிவரிக்கு அனுமதி அளிக்கும்படி மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதுமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மருந்து, பல சரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. லாக்டவுனால் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேசமயம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்கள்

இந்த சூழ்நிலையில், ஆன்லைன் மதுபான சேல்ஸ், போன் கால் மற்றும் ஹோம்டெலிவரிக்கு அனுமதி அளிக்க வேண்டும். ஹோம்டெலிவரிக்கு அனுமதி அளிப்பதால் சமூக விலகலை தொடர்ந்து பராமரிக்க உதவும் மேலும் சில்லரை மதுபான கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கலாம் என  மதுபான உற்பத்தி நிறுவனங்களின் அமைப்புகளான இன்டர்நேஷனல் ஸ்பிரிட்ஸ் அண்டு ஒயின்கள் சங்கம் மற்றும் இந்திய ஆல்கஹால் பானம் நிறுவனங்கள் கூட்டமைப்பு தனித்தனியாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மனு  அளித்துள்ளன.

ஹோம் டெலிவரி

லாக்டவுனால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் தனிநபர்களின் வாங்கும் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. ஆகையால் ஆல்கஹால் ஆன்லைன் விற்பனை மற்றும் ஹோம்டெலிவரிக்கு அனுமதி அளிக்கவேண்டும். கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட் இல்லாத பகுதிகளில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும். மேலும் பொருட்கள் போக்குவரத்து மற்றும் மக்களுக்கும் பாதுகாப்பானதாக இருக்கும். தகுதிவாய்ந்த மதுபான கடைகளில் டெலிவரி செய்யும் நபர்களுக்காக குறைந்தபட்சம் 3 முதல் 4 போக்குவரத்து பாஸ்கள் வழங்க வேண்டும். அரசுகளின் வருவாயில் கணிசமான பகுதி ஆல்கஹால் வாயிலான வருவாய் கொண்டுள்ளது. ஏழைகள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு உணவு, முகாம்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட சமூக தேவைகளை வழங்க மதுபான வாயிலான பணம் பல்வேறு அரசுகளுக்கு உதவும் என அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.