ஆன்லைனில் கஞ்சா… காபி பவுடர் என்ற பெயரில் அமோக விற்பனை!

 

ஆன்லைனில் கஞ்சா… காபி பவுடர் என்ற பெயரில் அமோக விற்பனை!

சென்னையைச் சேர்ந்த பரமகுரு என்பவர்  சாமர்த்தியமாக வாங்கி கடந்த மூன்று மாதங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

காபி பவுடா், பதப்படுத்தப்பட்ட மூலிகைகள் என்ற பெயரில் கஞ்சா இலைகள்  உலர் படுத்தப்பட்டு ஆன்லைன் மூலம் வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து விற்பனை செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TTN

ஆன்லைன் விற்பனை மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் இந்த கஞ்சா இலையை   சென்னையைச் சேர்ந்த பரமகுரு என்பவர்  சாமர்த்தியமாக வாங்கி கடந்த மூன்று மாதங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

TTN

இதையடுத்து போலீசாருக்கு கிடைத்த  தகவலின்படி பார்சல்களை தபால் துறை, புலனாய்வுத் துறையினர்  சோதனையிட்டனர். அதில் மேற்புறத்தில் காபி பவுடரும் உள்ளே, கஞ்சா இலைகள்  உலர்பவுடராக இருந்தது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும். இதுவரை 4 கிலோ வரை கஞ்சா சென்னைக்கு பார்சல் மூலம் வரவழைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கஞ்சா கடத்திய குற்றத்திற்காகப்  பரமகுரு கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.