ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் வெளியில் மருத்துவம் பார்க்க தடை…!

 

ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் வெளியில் மருத்துவம் பார்க்க தடை…!

ஆந்திர மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியவோ அல்லது தனியாக கிளினிக் வைத்து நடத்தவோ  தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு, அந்த மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் வெளியே சென்று தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்ய தடை விதித்துள்ளது. அரசாங்க மருத்துவர்களின் ஊதியம் உயர்த்தப்படுவதன் மூலம் அவர்களின் வெளியே சென்று மருத்துவம் பார்க்கும் நடைமுறைகளை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்று கருத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதலமைச்சரிடம் மருத்துவ நிபுணர் குழு அம்மாநிலத்தில் உள்ள மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் 100 க்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை பரிந்துரைத்தது. இந்த முடிவை ஆரம்பத்தில் சில மருத்துவர்கள் எதிர்க்கக் கூடும் ஆனால் இறுதியில் அவர்கள் புதிய விதிகளுக்கு ஒப்புக்கொள்வார்கள் என்று  நிபுணர் குழுவின் உறுப்பினர் சாம்பசிவா ரெட்டி தெரிவித்தார்.

இதனை கேட்டறிந்த பின் மருத்துவமனையின் படுக்கைகள், தலையணைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளுக்கு  மாற்றம் தேவை என்று அநத் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.

அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பங்களில் உலகத் தரங்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் தரமான மருந்துகளை மருத்துவமனைகள் இனிமேல் வாங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளின் தரத்தை நாம் உயர்த்தினால் தானாக நோயாளிகலும் அரசு மருத்துவமனைகளை நாடி வருவர். அதே போன்று அரசு மருத்துவர்களும் வெளியில் சென்று மருத்துவம் பார்ப்பது தடுக்கப்படும் என்பதை ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.