ஆந்திராவில் உள்ள 13% மதுக்கடைகளை நிரந்தரமாக மூட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு!

 

ஆந்திராவில் உள்ள 13% மதுக்கடைகளை நிரந்தரமாக மூட முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு!

ஊரடங்கைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் டாஸ்மாக் மதுக் கடைகள் ஊரடங்கிற்கு பிறகும் அதை திறக்காமல் அப்படியே மூடிவிடலாம் என தெரிவித்தனர். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது

ஊரடங்கைத் தொடர்ந்து தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தி குடும்பங்களில் மகிழ்ச்சி நிலைக்க செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் டாஸ்மாக் மதுக் கடைகள் ஊரடங்கிற்கு பிறகும் அதை திறக்காமல் அப்படியே மூடிவிடலாம் என தெரிவித்தனர். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூபாய் 100 கோடிக்கும் மேலாகவும் ஆண்டுக்கு 36 ஆயிரம் கோடிக்கும் மேலாக வருவாய் கிடைப்பதால் அதனை மூடவாய்ப்பில்லை என்றும் சொல்லப்பட்டது.

டாஸ்மாக்

இந்நிலையில் பச்சை மண்டலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து கர்நாடகா, ஆந்திரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மே.4 ஆம் தேதி முதல் டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழக அரசும், மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்தது. ஆனால் நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளை டாஸ்மாக் கடைகள் பின்பற்றப்படவில்லை எனக்கூறி, மதுபான கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

 tasmac

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் இந்த மாத இறுதியில் இருந்து 13% மதுக்கடைளை மூட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே 20% கடைகள் மூடிய நிலையில் தற்போது மேலும் 13% கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 4380 கடைகளில் 20% கடைகள் மூடியதால் 3469 ஆக இருந்த நிலையில், 13% மூடப்பட்டால் 2934 கடைகள் இயங்கும்.படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. பொது முடக்கம் முடிந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.