‘ஆண் நண்பருடன் லாஸ்லியா’…கவினை விட்டு போய்டாதீங்க என்று கெஞ்சும் நெட்டிசன்கள்!

 

‘ஆண் நண்பருடன் லாஸ்லியா’…கவினை விட்டு போய்டாதீங்க என்று கெஞ்சும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.ஆரம்பத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனச் சுற்றி திரிந்து வந்த லாஸ்லியா சேரனுடன் மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார். இதனால் ஒருகட்டத்தில் லாஸ்லியாவின் போக்கு பலரையும் வெறுப்படைய செய்தது.

losliya

இதையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இதனால் ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்து வருகிறார். மேலும் தனது புகைப்படங்களை வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில் லாஸ்லியா தனது  டிவிட்டர்  பக்கத்தில், தனது ஆண் நண்பருடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்ட இடத்திலிருந்து போட்டோ எடுத்துள்ளார். அதாவது இந்த புகைப்படம் கடந்த ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதை தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட கவின் ஆர்மியினர், கவினை  நினைத்துப் பாருங்கள். அவர் மனதை காயப்படுத்தும். அவரைவிட்டுப் போகாதீர்கள் என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.