ஆண் காதலை சொன்னதும் பெண் யோசிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

 

ஆண் காதலை சொன்னதும் பெண் யோசிக்க வேண்டிய சில விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

பெண்கள் ஆண்களிடமும். ஆண்கள் பெண்களிடமும் தங்களின் காதலை சொல்லி தங்கள் அன்பைப் பரிமாறி கொள்கின்றனர். அந்த வகையில் ஒரு ஆண் காதலைச் சொன்னால், அவனுடைய காதலை ஏற்றுக்கொள்வதற்கு முன்னால்  பெண் எவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும் என்பது குறித்த ஒரு சிறிய பதிவை இங்கு காணலாம் வாங்க!

பெண்கள் ஆண்களிடமும். ஆண்கள் பெண்களிடமும் தங்களின் காதலை சொல்லி தங்கள் அன்பைப் பரிமாறி கொள்கின்றனர். அந்த வகையில் ஒரு ஆண் காதலைச் சொன்னால், அவனுடைய காதலை ஏற்றுக்கொள்வதற்கு முன்னால்  பெண் எவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும் என்பது குறித்த ஒரு சிறிய பதிவை இங்கு காணலாம் வாங்க!

ஒரு ஆண், தன்னுடைய காதலை உங்களிடம் சொல்லும்போதே, உங்கள் மனது  முழுமையாக சந்தோசப்படுகிறதா என்று ஒரு நிமிடம் கவனியுங்கள். மனது சந்தோசப்பட்டால், ஓகே சொல்லிவிடுங்கள். அதற்குப் பதில், உங்கள் புத்தி `இவனைவிட பெட்டர் சாய்ஸ் மறுபடியும் கிடைக்குமான்னு தெரியலை. ஒத்துக்கோ’ என்பதுபோல உங்கள் மனதை கன்வின்ஸ் செய்ய முயன்றால், சம்மதம் சொல்வதை தள்ளிப் போடுங்கள்.  

love

உங்களுடைய கலாச்சாரம், உணவு, எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப்போவாரா? 5 வருடங்கள், 10 வருடங்கள், 15 வருடங்கள் கழித்து இவர் எப்படி இருப்பார்? இந்தக் கால காதலில் இந்த 2 கேள்விகளுக்கும் ஓரளவுக்குத் திருப்தியான பதில் கிடைத்தால் அவன் உங்களுக்கு நல்ல சாய்ஸ் தான்.

பிரச்னை வருமா? வந்தால் இவன் துணை நிற்பானா? என்னால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும். அதே நேரம் ரொம்பவும் முன்னெச்சரிக்கையாகவும் இல்லாமல், யதார்த்தமான சந்தேகங்களாக தான் அது இருக்க வேண்டும்.  

திருமணத்துக்குப் பிறகு ஒரு அறைக்குள் வாழப்போகிற அந்தரங்க வாழ்க்கையும் இருக்கிறது. அந்தப் பகிர்தலுக்கு உங்கள் மனம் சம்மதிக்கிறதா என்பதையும் தெரிந்துகொண்ட பிறகு சம்மதம் சொல்வதே நல்லது.

love

தெரியாத ஆளைவிடத் தெரிந்தவன் பாதுகாப்பு என்று காதலுக்கு ஓகே சொல்லாதீர்கள். திருமணத்துக்குப் பிறகு நீங்கள் நீங்களாகவோ, காதலன் காதலனாகவே இருக்கப் போவதில்லை. சம்பவங்கள் மனிதர்களை மாற்றும். அதனால், காதல் சொல்கிற ஆணின் அடிப்படைக் குணங்கள் நன்றாக இருக்கின்றனவா என்று பாருங்கள். அடிப்படை குணங்கள் என்றால் பெரிதாக ஒன்றும் இல்லை. அந்த ஆண் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறானா, சின்னச் சின்ன சென்டிமென்ட்ஸ் வைத்திருக்கிறானா, நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறதா என்றால் சம்மதம் சொல்லலாம். ‘இப்படித்தான் வாழ்வேன்; இதெல்லாம் இருந்தாதான் வாழ்வேன்’ என்பது மாதிரியான வெறித்தனமான லட்சியங்கள் கொண்டிருந்தால், சற்று யோசித்து முடிவெடுங்கள். 

ஒருவன் டீக்கடையிலும் டீ குடிப்பான் ஸ்டார் ஹோட்டலிலும் காபி குடிப்பான். அந்த மாதிரி போராட்டம், சந்தோஷம், சென்டிமென்ட்ஸ், நிம்மதி என்று வாழ்க்கை பலதரப்பட்ட அனுபவங்களைக் கொண்டதாக இருக்கும். இப்படிப்பட்ட ஆணுடன் நம்பி உங்கள் திருமணப் பயணத்தை ஆரம்பியுங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.