ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரிகள் எக்ஸ்ட்ரா லைஃப் கொடுக்கணுமா?…அப்போ இதை பண்ணுங்க!

 

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரிகள் எக்ஸ்ட்ரா லைஃப் கொடுக்கணுமா?…அப்போ இதை பண்ணுங்க!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரிகள் எக்ஸ்ட்ரா லைஃப் கொடுப்பதற்கான ஒரு சின்ன ஐடியாவை கூகுள் நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது.

டெல்லி: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பேட்டரிகள் எக்ஸ்ட்ரா லைஃப் கொடுப்பதற்கான ஒரு சின்ன ஐடியாவை கூகுள் நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது.

ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு அதிகளவில் திருப்தியை தராத விஷயமாக இருப்பது பேட்டரி திறன். ஒருநாளுக்கு மேல் ஸ்மார்ட்போன் பேட்டரி நீடித்து விட்டால், அதை விட சந்தோசம் அவர்களுக்கு இருக்க முடியாது எனலாம். இந்நிலையில், செல்போன் ஆப்கள் அதிகப்படியான பேட்டரி பவரை பயன்படுத்துவதை எவ்வாறு தவிர்க்கலாம் என்பது குறித்து கூகுள் நிறுவனம், ஆண்ட்ராய்டு டெவலப்பர்களிடம் ஆலோசனை நடத்தியது.

அதன் முடிவில் ஆண்ட்ராய்டு போன்களில் டார்க் மோடை பயன்படுத்தினால், பேட்டரி இயங்க குறைவான பவரை எடுத்துக் கொண்டு அதன் வாழ்நாளை நீட்டிக்கும் என்பதை கூகுள் உறுதி செய்துள்ளது. அதாவது ஸ்மார்ட்போனின் இயங்குதளம் மற்றும் அதன் ஆப்களை கருமை நிறத்தில் பயன்படுத்தும்போது பேட்டரி திறன் அதிக நேரம் நீடிப்பதாக கூறியுள்ளது.

யூடியுப்-ஐ டார்க் மோடில் முழு வெளிச்சத்தில் பயன்படுத்தும்போது, 43 சதவீத குறைவான பவர் மட்டுமே தேவைப்படுகிறது என்பதை கூகுள் விளக்கியது. மேலும் ஆப் டெவலப்பர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் வெள்ளை நிறம் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் கூகுள் தெளிவுபடுத்தியது. அதேசமயம், வெள்ளை நிறத்தை இரண்டாம்பட்ச நிறமாக பயன்படுத்த கூகுள் அறிவுறுத்தியுள்ளது.