ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமா? வரி விலக்கும் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தில் இலவச சேவையும் கிடைக்கும்

 

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சமா? வரி விலக்கும் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தில் இலவச சேவையும் கிடைக்கும்

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால், உச்ச நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி சேவையை உங்களால் இனி பெற முடியும். அதாங்க உங்களுக்காக இலவசமாக வாதாட வக்கீல் கிடைப்பார்

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு ரூ.2.5 சதவீதத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இப்பம் உச்ச நீதிமன்றத்தின் ஒரு இனிப்பான செய்தியும் கூடுதல் போனசாக அவர்களுக்கு கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் இனி உச்ச நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி சேவையை பெறலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம்

பொதுவாக  நாம உச்ச  நீதிமன்றத்தில் ஒரு வழக்கை நடத்த வேண்டும் என்றால் அதற்கு பெரிய தொகை செலவிட வேண்டியது இருக்கும். நமக்காக வாதாடும் வக்கீலுக்கு கட்டணமாக ஒரு தொகையை கொடுக்க வேண்டியது இருக்கும். வசதி படைத்தவர்களுக்கு செலவு ஒரு பொருட்டாக இருக்காது. ஆனால் ஏழைகளுக்கு அப்படி இல்லை. இதனால் உச்ச நீதிமன்றம் ஏழைகளுக்கும் நியாயம் கிடைக்கும் வேண்டும் என்ற நோக்கில் இலவச சட்ட உதவி சேவையை வழங்குகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இலவச சட்ட உதவி சேவையை பெறுவதற்கும் சில விதிமுறைகளை உச்ச நீதிமன்றம் வைத்திருக்கிறது. அதாவது ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை சம்பாதிக்கும் வசதி இல்லாதவர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் இலவச சட்ட உதவி சேவையை பெற முடியும். தற்போது இந்த விதிமுறையை உச்ச நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. 

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் சட்ட சேவை விதிமுறை 7ல் உச்ச நீதிமன்றம் திருத்தம் செய்துள்ளது. இலவச சட்ட உதவியை ஏழைகள் பெறுவதற்கான வருவாய் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் இனி உச்ச நீதிமன்றத்தின் இலவச சட்ட உதவி சேவையை பெறலாம். இந்த திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக இந்தி டெய்லி இந்துஸ்தான் வெளியிட்ட செய்தியை அடிப்படையாக கொண்டு ஜீ பிசினஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆக, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் இனி தனக்காக வாதாட உச்ச நீதிமன்றத்தில் இலவச வக்கீல் சேவை பெற முடியும்.