ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி?

 

ஆண்களின் மலட்டுத் தன்மையை அறிவது எப்படி?

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. மருத்துவ ரீதியாக மலத்தன்மை உள்ளது கணவனுக்கா அல்லது மனைவிக்கா என்பதை அறிந்துகொள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன.

குழந்தை உருவாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டுமல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனெனில் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன.

infertility

ஒரு குழந்தை உருவாவதற்கு ஆண்களிடமிருந்து வரும் விந்தணு பெண்ணின் கரு முட்டையை அடைந்து கரு உருவாக வேண்டும். பெண்களின் கரு முட்டையானது மாதவிடாய்க் காலத்தின் நடுவிலே ஓவரியில் இருந்து வெளிவரும். இது வெளி வந்து மூன்று நாட்களுக்குள் அந்த பெண் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு அவளின் பெண் உறுப்பின் உள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டால் அது அந்த முட்டை கருவாக மாற வாய்ப்பு உள்ளது.

infertility

பெண்களுக்கு சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு முட்டையே வெளிவரும். ஆனால் ஆண்களுக்கு ஒரு நேரத்தில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் வெளிவரும், ஆனாலும் இதில் ஒன்றே, கரு முட்டையை சென்றடைந்து குழந்தையாகும்.

infertility

இந்த விந்தணுவானது ஆணின் உறுப்பிலே இருந்து வெளிவரும் செமினல் ஃப்லூயிட் எனப்படும் திரவத்தில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். இந்த திரவத்தில் விந்தணுக்கள் உயிர் வாழ்வதற்கான அனைத்தும் நிரம்பி இருக்கும். ஆணுக்கு குழந்தை உருவாக்குவதற்குரிய தன்மையை அறிய இந்த செமினல் ஃப்லூயிட் பயன்படுத்தப்படுகிறது.

இந்த செமினல் ஃப்லூயிடில் விந்துணுக்களின் எண்ணிக்கை, விந்துகள் அசையும் தன்மை, விந்துக்களின் உருவ அமைப்பு போன்றவை சோதனை செய்யப்படுகின்றன. இவை குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே அந்த ஆணால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.