ஆட்சியை பறித்துக் கொடுத்து ஆட்டம் காட்டும் பாஜக… எக்குத்தப்பாக மாட்டித்தவிக்கும் எடியூரப்பா..!

 

ஆட்சியை பறித்துக் கொடுத்து ஆட்டம் காட்டும் பாஜக… எக்குத்தப்பாக மாட்டித்தவிக்கும் எடியூரப்பா..!

முதல்வர் பதவிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது எங்கள் பொறுப்பு. நீங்கள் நிம்மதியாக ஆட்சி நடத்துங்கள். பிரச்னைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்

கர்நாடகாவில் பா.ஜ. ஆட்சி அமைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவுபெறும் தருவாயில் முதல்வர் எடியூரப்பாவுக்கு பல நெருக்கடிகள் தோன்றியுள்ளது. மூன்று துணை முதல்வர் பதவி வழங்கும்படி கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் அவர் திகைப்படைந்துள்ளார். அவர் ஆதரவாளர்களோ கலக்கமடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பா.ஜ. ஆட்சி அமைந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவு பெறுகிறது. ஆனால் ஆட்சி முழுமை பெறவில்லை.yeddyurappa

இம்மாதம் 20 ம் தேதி 17 பேர் அமைச்சர்களாக்கப்பட்டனர். இவர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. இதற்கிடையில் உமேஷ் கத்தி ரேணுகாச்சார்யா அங்காரா பாலசந்திர ஜார்கிஹோளி போப்பையா அரவிந்த லிம்பாவளி உட்பட 20 க்கும் மேற்பட்டோர் அமைச்சர் பதவி கிடைக்காததால் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவதே முதல்வர் எடியூரப்பாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு புறம் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையின் கதி என்னவாகும் என தெரியவில்லை. இதற்கிடையில் டில்லி சென்ற எடியூரப்பா பா.ஜ. தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பினார். அமைச்சர்களுக்கு பதவி கிடைத்தும் துறைகள் ஒதுக்காததால் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். அவர்களுக்கு நேற்று துறைகள் ஒதுக்கப்படும் என முதல்வரே அறிவித்தார்.

yeddyurappa

ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானதால் துறைகள் ஒதுக்குவதும் தாமதமாகியுள்ளது. இதற்கிடையில் கட்சியின் எதிர்காலத்தை கருதியும் முதல்வரின் தன்னிச்சை செயல்பாட்டுக்கு மூக்கணாங்கயிறு மாட்டும் வகையிலும் மூன்று பேருக்கு துணை முதல்வர் பதவி வழங்க பா.ஜ. மேலிடம் எடியூரப்பாவுக்கு கட்டளையிட்டுள்ளது. அதுவும் கட்சியின் தேசிய பொது செயலர் சந்தோஷ் கட்டாயத்தின் பேரில் மேலிடம் உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாதி வாரியாக ‘குருபர்’ கோட்டாவில் அமைச்சர் ஈஸ்வரப்பா; ‘தலித்’ கோட்டாவில் அமைச்சர் கோவிந்த் கோர்ஜோல்; ‘ஒக்கலிகர்’ கோட்டாவில் அமைச்சர் அஸ்வத் நாராயணா ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும்படி டில்லியிலிருந்து தகவல் வந்துள்ளதாக பா.ஜ. வட்டாரத்தில் பரபரப்பாக
பேசப்படுகிறது.

இதையறிந்த பா.ஜ. – எம்.எல்.ஏ.க்கள் பலரும் முதல்வர் எடியூரப்பாவை சந்தித்தும் எந்த காரணத்துக்கும் துணை முதல்வர் பதவி உருவாக்க வேண்டாமென நெருக்கடி கொடுக்கின்றனர். துணை முதல்வர் பதவி உருவாக்கினால் சில மூத்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியடையும் வாய்ப்புள்ளது என தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டாவிடம் முதல்வர் தெரிவித்துள்ளார்.Modi

இதற்கு பதிலளித்த அவர் ‘முதல்வர் பதவிக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது எங்கள் பொறுப்பு. நீங்கள் நிம்மதியாக ஆட்சி நடத்துங்கள். பிரச்னைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம்’ என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.வின் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வராக இருந்த போது அசோக்
ஈஸ்வரப்பா ஆகிய இருவர் துணை முதல்வராக பதவி வகித்ததுள்ளனர்.