ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

 

ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாய கடன் தள்ளுபடி: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது

போபால்: மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதையடுத்து, அம்மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 28-ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து அங்கு ஆட்சியை பிடிக்கும் பொருட்டு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அடுத்த  ஆண்டு நடைபெற்றவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பாரக்கப்படும் மத்தியப் பிரதேச மாநில சட்டபேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், : மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம். 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம். ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு ஆணையம் அமைக்கப்படும். மகளிருக்கு திருமண உதவி தொகையாக ரூ.51,000 வழங்கப்படும். வேலை இல்லா பட்டதாரிகளுக்கு மாதம் தோறும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். கிராமங்கள் தோறும் பசுக்களை காக்க கோசாலைகள் அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.