ஆடம்பர விழா இல்லாமல் திறக்கப்பட்டது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு

 

ஆடம்பர விழா இல்லாமல் திறக்கப்பட்டது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு

மெரினா கடற்கரை சாலையில் எவ்வித ஆடம்பர விழாவும் இல்லாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டது.

சென்னை: மெரினா கடற்கரை சாலையில் எவ்வித ஆடம்பர விழாவும் இல்லாமல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் காமராஜர் சாலையில் அரசு சார்பில் ரூ.2.52 கோடி செலவில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நினைவாக அவரது பெயரில் நூற்றாண்டு நினைவு வளைவு கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. 

ஆனால் இதனை எதிர்த்து வழக்கறிஞர் தினேஷ் குமார் என்பவர் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்.ஜி.ஆர் வளைவை திறக்க அனுமதிக்கக்கூடாது என பொதுநல வழக்கு தொடந்திருந்தார். மேலும், அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதால் அரசியல் லாபத்துக்காக எம்.ஜி.ஆர் வளைவு அமைக்கப்படுவதாகவும் அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் வளைவை திறக்க தடை விதித்தனர். அதன் பிறகு  ஆடம்பர விழாவாக நடத்தாமல்  மெரினாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர். அதன்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு கட்டுமான பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஆடம்பர விழா எதுவும் இல்லாமல் நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டது.