ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

தமிழகத்தில் வரும் ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டது.

தமிழகத்தில் வரும் ஜூன் 8 மற்றும் 9-ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டது.

exam

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி வரும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தெரிவித்தது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் மார்ச் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பத்தினை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அனுப்பலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது இணையதளம் சரிவர இயங்காததால் இதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப் பட்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. 

exam

2018 ஆம் ஆண்டு நடத்தப்படவிருந்த தகுதித் தேர்வு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தினால் கைவிடப்பட்டது. இதனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் இந்த தேர்விற்கு எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

தேர்விற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வு வாரியம் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்விற்கான தேதிகள் தள்ளிச்சென்றது. மே 23ம் தேதி முதல் அனைத்து தேர்தல் வேலைகளும் முடிவடைந்து விடுவதால், ஜூன் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.