ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: லிதன் தாஸ் அதிரடி சதம் – இந்தியாவுக்கு 223 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

 

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: லிதன் தாஸ் அதிரடி சதம் – இந்தியாவுக்கு 223 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 223 ரன்களை இலக்காக வங்காளதேசம் நிர்ணயித்துள்ளது.

துபாய்: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 223 ரன்களை இலக்காக வங்காளதேசம் நிர்ணயித்துள்ளது.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு நாடுகளான துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்-4 சுற்று முடிவில் இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேச அணியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இதையடுத்து இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதும் இறுதிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் ஓய்வு பெற்ற ரோகித் ஷர்மா இந்தப் போட்டியில் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கிய லிதன் தாஸ் 121 ரன்களை குவித்தார். மெஹ்டி ஹாசன் 33 ரன்களும், சவும்யா சர்கார் 32 ரன்களும் எடுத்தனர். மற்ற வங்காளதேச வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 48.3 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.