ஆசிட் வாங்குவது எவ்வளவு ஈஸி தெரியுமா… வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோன்

 

ஆசிட் வாங்குவது எவ்வளவு ஈஸி தெரியுமா… வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோன்

பெண்கள் மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும், ஆசிட் வாங்குவது எவ்வளவு ஈஸி என்பதை நடிகை தீபிகா படுகோன் வீடியோவாக எடுத்துக் காட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்கள் மீது ஆசிட் வீசுவதைத் தடுக்க ஆசிட் விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும், ஆசிட் வாங்குவது எவ்வளவு ஈஸி என்பதை நடிகை தீபிகா படுகோன் வீடியோவாக எடுத்துக் காட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

deepik

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை வரலாறு படத்தை தீபிகா படுகோன் எடுத்து, அந்த பெண்ணின் வேடத்தில் நடித்துள்ளார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் தீபிகா படுகோன் நடித்த சபக் படத்தை பா.ஜ.க-வினர் புறக்கணிக்கும்படி பொது வெளியில் மிரட்டி வருகின்றனர். இதனால், எதிர்பார்த்த அளவுக்கு படம் போகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆசிட் வாங்க மிகக் கடுமையான சட்டம் இருக்கும் இந்தியாவில் ஆசிட் பாட்டல் வாங்குவது எப்படி என்பதைக் காட்டும் ஸ்டிங் ஆக்‌ஷனில் தீபிகா படுகோன் ஈடுபட்டார். நடிகர் ஒருவரை அனுப்பி ஆசிட் வாங்க வைக்கிறார். அதை தூரத்திலிருந்து ரகசியமாக ஒளிப்பதிவு செய்கிறார். அவர் ஒவ்வொரு கடையாக ஏறி ஆசிட் கேட்கிறார். எந்த கேள்வியும் இன்றி ஆசிட் விற்பனை செய்யப்படுகிறது.

 

யார் மீதும் ஊற்றிவிடாதீர்கள் என்று எச்சரிக்கை மட்டுமே வருகிறது. ஒரே ஒரு கடையில் மட்டும் ஆசிட் வாங்க வேண்டும் என்றால் ஐ.டி கார்டு வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்படி மொத்தம் 24 பாட்டல் ஆசிடை தீபிகா படுகோன் ஏற்பாடு செய்திருந்த குழு வாங்கியது.

deep

இந்த வீடியோவை தீபிகா படுகோன் வெளியிட்டுள்ளார். இது இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறத்து அவர் கூறுகையில், “ஆசிட் சர்வ சாதாரணமாக விற்கப்படுவதால்தான் ஆசிட் வீச்சு நடக்கிறது. ஆசிட் வீச்சை தடுக்க வேண்டியது கடை உரிமையாளர்களின் கடமை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட. மக்கள் சட்டவிரோதமாக ஆசிட் வாங்குவதை அறிந்தால் உடனடியாக இது பற்றி போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தால் இப்படி சட்டவிரோதமாக ஆசிட் வாங்குவது தடுக்கப்படும்” என்றார்.