ஆக்ரா பெயர் ‘அக்ரவன்’ என மாறுகிறதா? உத்தரபிரதேச அரசின் அடுத்த அலம்பல்!

 

ஆக்ரா பெயர் ‘அக்ரவன்’ என மாறுகிறதா? உத்தரபிரதேச அரசின் அடுத்த அலம்பல்!

மக்களுக்கான நலத்திட்டங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் செய்கிறார்களோ இல்லையோ… நீண்ட நாட்களாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் இடங்களின் பெயர்களை மாற்றியமைப்பதில் ஒவ்வொரு மாநிலத்திலுமே வெற்றி பெற்றும் வரும் ஆட்சியாளர்கள் தனி கவனம் செலுத்துகிறார்கள்.

மக்களுக்கான நலத்திட்டங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் செய்கிறார்களோ இல்லையோ… நீண்ட நாட்களாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் இடங்களின் பெயர்களை மாற்றியமைப்பதில் ஒவ்வொரு மாநிலத்திலுமே வெற்றி பெற்றும் வரும் ஆட்சியாளர்கள் தனி கவனம் செலுத்துகிறார்கள். முன்னதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, அலகாபாத்தின் பெயரை பிரயாக்ராஜ் என்றும், முகல்சரய் சந்திப்பு ரயில் நிலையத்தின் பெயரை பண்டிட் தீன் தயால் உபாத்யாய சந்திப்பு என்றும், பைசாபாத் மாவட்டத்தை அயோத்தி என்றும் மாற்றியிருந்தது. இந்நிலையில், தற்போது உத்தரபிரதேச அரசு ஆக்ராவின் பெயரை அக்ரவன் என்று மாற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

agra

இது குறித்து ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் பண்டைய காலங்களில் இந்த நகரம் வேறு எந்த பெயரிலாவது அறியப்பட்டதா என்பதை ஆராயுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஆவணக் காப்பகத்தை ஆராய்ந்து வரலாற்று பதிவுகளை ஆவணப்படுத்துவோம் என்று அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் அரவிந்த் தீட்சித் கூறியிருக்கிறார். 
ஆக்ராவுக்கு வேறு பெயர் சூட்டுமாறு சில உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்திருப்பதாகவும், இதையடுத்து ஆக்ரா நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தை அணுகியதாகவும் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பலமுறை பாஜக எம்.எல்.ஏ வாக இருந்த ஜெகன் பிரசாத் ஆக்ராவுக்கு ‘அக்ரவன்’ என்று பெயர் மாற்றம் செய்யக் கோரி ஆதித்யநாத் அரசுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார்.  வரலாற்றாசிரியர்கள், ஆக்ரா என்ற பெயர் ‘அகர்’ என்ற இந்தி வார்த்தையிலிருந்து வந்தது என்றும் அதற்கு பொருள் ‘உப்பளம்’ என்றும் கூறியுள்ளனர். 

aditya nanth

இது குறித்து வரலாற்று ஆசிரியர்  சித்திகி கூறும் போது, இந்த நகரம் பிரிஜ்பூமியின் ஒரு பகுதி என்றும் இந்த நிலம் கிருஷ்ணரின் பிறப்பு மற்றும் புகழ்பெற்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்றும் கூறியுள்ளார்.  ஆக்ராவுக்கு இந்து மன்னர் ஆக்ரேமேஷ் அல்லது ஆக்ரேமேஷ்வரின் பெயரிடப்பட்டது என்று தாலமி நினைத்திருக்கலாம். ஆக்ரா, கிருஷ்ணரின் தாத்தா மகாராஜா அக்ரசேனர் அல்லது உக்ரசேனர் என்பவரால் நிறுவப்பட்டது என்று ஒரு மாற்று பார்வை உள்ளது. முகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த நகரம் மராட்டியர்களின் செல்வாக்கின் கீழ் வந்தது. அதற்குப் பிறகு, அவர்கள் ஆக்ரா என்று அழைக்கத் தொடங்கினர் என்று உத்திரபிரதேச அரசின் இணையதளத்தில் தகவல்கள் கூறுகின்றன.