அ.தி.மு.க – தி.மு.க-வை தூக்கி எறியும் சக்தி இருக்கா? – சீமானுக்கு தொல் திருமாவளவன் அட்வைஸ்!

அ.தி.மு.க – தி.மு.க-வை தூக்கி எறியும் சக்தி இருக்கா? – சீமானுக்கு தொல் திருமாவளவன் அட்வைஸ்!

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சீமானுக்கு தொல் திருமாவளவன் மறைமுகமாக புத்திமதி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த ஓர் புத்த வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இருவரது பேச்சும் கவனத்தை ஈர்த்தது.

thiruma

திருமாவளவன் பேசும்போது, “தமிழ் தேசிய கோட்பாட்டில் நமக்கு எவ்வித மாறுபாடும் இருக்காது. ஆனால், அதை அடைய வேண்டிய வழியில் மாற்றுக் கருத்து இருக்கலாம். தமிழ் மகன்தான் தமிழ் நிலத்தை ஆள வேண்டும் என்பதிலும், தமிழர்களின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வாக்கு வங்கி அரசியலில் நாம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளோம். தமிழக அளவில் தி.மு.க-வையும் அதி.மு.க-வையும் தூக்கி எறியும் சக்தியை நாம் பெற்றிருக்கிறோமா? 

thiruma

தமிழ் தேசியத்திற்கு எதிராக சனாதனம் நிற்கிறது. இந்திய அளவில் மாபெரும் வலிமையை சனாதனக் கோட்பாடு பெற்றிருக்கிறது. நாம் சனாதனத்துக்கு எதிராக நிற்கப் போகிறோமா அல்லது அம்பேத்காரியம் மற்றும் பெரியாரியத்துக்கு எதிராக நிற்கப்போகிறோமா என்பதுதான் கேள்வி. தேசிய அளவில் வலிமை பெற்றிருக்கும் கட்சிகள் இரண்டு. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்று ஜனநாயக சக்தி, இன்னொன்று சனாதன சக்தி. ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும் காங்கிரஸால்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும் என்கிற தெளிவு வேண்டும்.

amit

நாம் வாக்க வங்கி அரசியலில் தன்னிறைவு பெறும் வரை நெளிவு சுளிவுகளோடுதான் அரசியல் உத்திகளை வகுக்க வேண்டும்.
நாம் இந்தியர் என்ற சொல்லிக்கொள்வதில் நாட்டம் இல்லை. ஆனால், நாம் இந்தியரே இல்லை என்ற அமித்ஷா நிறுவப் பார்க்கிறார். அப்படி இருக்கையில் தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவை உள்ளது” என்றார்.