அஸ்ஸாம்: தேசிய குடிமக்கள் பதிவேடு இணையத்தில் வெளியானது! மீண்டும் பலர் பெயர் மிஸ்ஸிங்

அஸ்ஸாம்: தேசிய குடிமக்கள் பதிவேடு இணையத்தில் வெளியானது! மீண்டும் பலர் பெயர் மிஸ்ஸிங்

நாட்டிலேயே முதன்முறையாக அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. பல லட்சம் பேர் அகதிகள் ஆக்கப்பட்டனர். குடும்பத்தில் ஒருவரை இந்தியர் என்றும் மற்றொருவரை அகதி என்றும் வகைப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் இந்த பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அஸ்ஸாம் மாநில மக்களுக்கான தேசிய குடிமக்கள் பதிவேடு அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பலருடைய பெயர் காணாமல் போயுள்ளதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நாட்டிலேயே முதன்முறையாக அஸ்ஸாமில் குடிமக்கள் பதிவேடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. பல லட்சம் பேர் அகதிகள் ஆக்கப்பட்டனர். குடும்பத்தில் ஒருவரை இந்தியர் என்றும் மற்றொருவரை அகதி என்றும் வகைப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகள் இந்த பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

assam-nrc-01

இந்த நிலையில், இந்த பட்டியலை அரசு தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. www.nrcassam.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பட்டியலை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்ற பலரது பெயர் இந்த இணையத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், அஸ்ஸாம் மக்கள் மத்தியில் மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெயர் விடுபட்டிருக்கும். எனவே கவலைப்பட வேண்டும். வரும் நாட்களில் சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Debabrata-Saikia

ஆனால், குறிப்பிட்ட பிரிவினரின் பெயர்கள் மட்டுமே காணாமல் போய் உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இது குறித்து அஸ்ஸாம் எதிர்க்கட்சித் தலைவர் டெபப்ரதா சாய்கியா, இந்திய பொது பதிவாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இணையம் தரவுகள் திடீரென்று ஏன் மறைய வேண்டும்? இது மர்மமாக உள்ளது. எனவே, இந்த விஷயத்தை அவசரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் சிக்கலான இந்த பிரச்னையில் என்.ஆர்.சி ஆணையம் சரியாகக் கையாளவில்லை. எனவே, சந்தேகிக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன” என்று கூறியுள்ளார்.