அஸ்த நட்சத்திரகாரர்கள் குணாதிசயங்கள் மற்றும் வழிபடவேண்டிய கோயில்கள் 

 

அஸ்த நட்சத்திரகாரர்கள் குணாதிசயங்கள் மற்றும் வழிபடவேண்டிய கோயில்கள் 

அஸ்த நட்சத்திரகாரர்களின் குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள் பற்றி பார்போம்.

நினைவாற்றலுக்கும் கற்பனைக்கும் உரிய கிரகமான சந்திரனின் ஆதிக்கத்திலும், சுயமுயற்சி, தன்மானம் ஆகியவற்றுக்கு உரிய கிரகமான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள்.

hastham

அஸ்தம் என்றால் ‘உள்ளங்கை’ என்று பொருள். ஐந்து நட்சத்திரங்களின் கூட்டமானது நமது கை விரல்களின் நுனிகளைக் குறிப்பதுபோல இந்த நட்சத்திரம் அமைந்துள்ளது. 

உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள்.

narsimma

பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள்.

மக்கள் வணங்கும்படியாகவும், வீரம், அழகு, கடின சுபாவம், நல்ல புத்தி ஆகியவை உடையவராகவும் இருப்பார்கள்.வெகுளியாகவும் வியாபாரியாகவும் கடின உழைப்பாளியாகவும் வலிமையானவராகவும் இருப்பார்கள்.எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

சிறந்த நகைச்சுவையாளராகவும் பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவராகவும் இருப்பார்கள்.வேத சாஸ்திர அறிவு பெற்றிருப்பார்கள். பிறருக்கு எளிதில் உதவுவார்கள். அதிகம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

hastham

செல்வச் செழிப்புடன் வாழும் இவர்களில் பலர் சித்தர், பீடாதிபதி, அறிவியல் அறிஞர், வரலாற்றுப் பேராசிரியர், கல்வெட்டு ஆய்வாளர் ஆகியோரைப் போற்றுபவர்களாகவும் இருப்பார்கள். வெளியூர் பயணங்கள் என்றால் இவர்களுக்கு கொள்ளைப் பிரியம்.

இசை ஆர்வம் மிக்கவர்களாக இருக்கும்நீங்கள் எப்போதும், எந்த வேலையை செய்துகொண்டிருந்தாலும் பாட்டு பாடிக்கொண்டோ அல்லது பாடலைக் கேட்டுக் கொண்டோ அந்த வேலையைச் செய்வீர்கள். 

அஸ்த நட்சத்திரகாரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள் :

1. கொடுமுடியில் வீற்றிருக்கும் சௌந்தரநாயகி உடனுறை மகுடேஸ்வரரை வணங்குதல் நன்மை உண்டாகும்.

2. திருக்கோஷ்டியூரில் அருள்பாலிக்கும் நாச்சியார் உடனுறை ஸ்ரீ உரகமெல்லணையானை வணங்குவது யோக பலன்களை கொடுக்கும்.

3. கோமல் கிருபா கூபாரேச்வரர் கோயில் சென்று வழிபாடு செய்வது பூர்வ ஜென்ம பாவங்களை நீக்கும்.