அவ்வை சண்முகி போல் மாறுவேடம் அணிந்து வீட்டு வேலை செய்து வந்த ஆண்…நெகிழ வைக்கும் காரணம்!

 

அவ்வை சண்முகி போல் மாறுவேடம் அணிந்து வீட்டு  வேலை செய்து வந்த ஆண்…நெகிழ வைக்கும் காரணம்!

ஆண்களுக்கு வேலை இல்லை என்று பலரும் அவரை விரட்டி எடுக்க அவர் மனதில் உதித்தது அவ்வை  சண்முகி படத்தில் கமல் போட்டிருந்த பெண்ணின் வேடம் தான். 

அவ்வை சண்முகி படத்தில்  நடிகர் கமல் ஹாசன் மகளுக்காக பெண் வேடம் போட்டு அசத்தினார். அதேபோல் மானாமதுரை இதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ttn

மானாமதுரை மலையனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. 40 வயதாகும் ராஜாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் இவருக்கு வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல  இடங்களில் வேலைக்கேட்டு  வந்துள்ளார்.  ஆனால்  ஆண்களுக்கு வேலை இல்லை என்று பலரும் அவரை விரட்டி எடுக்க அவர் மனதில் உதித்தது அவ்வை  சண்முகி படத்தில் கமல் போட்டிருந்த பெண்ணின் வேடம் தான். 

ttn

உடனே லுங்கி, சட்டையிலிருந்து மாறி புடவை நீண்ட ஜடை என  பெண் போல வேடமணிந்து ஒரு இடத்தில் வேலைவிட்டுச் சென்று அங்கு வேலையும் கிடைத்துவிட்டது. அன்றிலிருந்து பெண் போல வேடமிட்டு 3 வீடுகளில் வேலைப்பார்த்துச் சம்பாதித்து வந்துள்ளார். 

ttn

இந்நிலையில் ராஜா பெண் அல்ல ஆண்  தான் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்க, பெண் வேடம் போட்டு வீட்டு உரிமையாளர்களை நம்ப வைத்து வேலைக்குச் சேர்வது தவறு, இது கடைசியில் விபரீதத்தில் போய்  முடியும். என்னதான் பெற்றோரை காப்பாற்ற இப்படி வேஷம் போட்டாலும்  ஆண்களுக்கு வேலையே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.