அவெஞ்சர்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்த ‘தானோஸ்’ சக்தியை பயன்படுத்திய கூகுள்

 

அவெஞ்சர்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்த ‘தானோஸ்’ சக்தியை பயன்படுத்திய கூகுள்

தானோஸின் சக்தியை நீங்கள் கண்முன்னே காணலாம். இதன்மூலம், கூகுள் நிறுவனம் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தை பெருமைப்படுத்தியதோடு,அதன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபலங்களின் பிறந்தநாளின் போது டூடுல் வழங்கும் கூகுள், அவெஞ்சர்ஸ் வெளியீடை கொண்டாட ஒரு மேஜிக் செய்துள்ளது.

sggf
பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ இன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீசாகியுள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம்,’அவெஞ்சர்ஸ்’ தொடரின் கடைசி பாகம் என்பதால் ரசிகர்களிடம் இது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,அவெஞ்சர்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்த கூகுள் நிறுவனம் ஒரு ‘மேஜிக்’ வேலையை செய்துள்ளது.கூகுள் பக்கத்தில் சென்று ஆங்கிலத்தில் ‘Thanos’ என்று டைப் செய்துவிட்டு, கீழ் வரும் தனோஸ்-இன்’கை’ யை கிளிக் செய்து பாருங்கள்..

khaHJ

கூகுளின் அந்த மேஜிக் என்னவென்று தெரியும். தானோஸின் சக்தியை நீங்கள் கண்முன்னே காணலாம். இதன்மூலம், கூகுள் நிறுவனம் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தை பெருமைப்படுத்தியதோடு,அதன் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.