அவர் ஒரு மூத்த தலைவர்…. இதற்கு மேல் ஒன்றும் பேச விரும்பவில்லை….ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர்….

 

அவர் ஒரு மூத்த தலைவர்…. இதற்கு மேல் ஒன்றும் பேச விரும்பவில்லை….ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர்….

அவர் ஒரு மூத்த தலைவர் இதற்கு மேல் ஒன்றும் பேச விரும்பவில்லை என ராகுல் காந்தியின் கொரோனாவைரஸ் டிவிட் தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

சீனாவில்  கொரோனாவைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வந்தது மாதிரி தெரியவில்லை. இதுவரை அங்கு கொரோனாவைரஸால் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தியாவிலும் 3 பேருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கபப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவைரஸ் விவகாரத்தில் ராகுல் காந்தி டிவிட்டரில் மத்திய அரசை குற்றச்சாட்டி இருந்தார். 

கொரோனாவைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள்

ராகுல் காந்தி நேற்று முன்தினம் டிவிட்டரில், நம் மக்களுக்கும், நாட்டுக்கும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய கடுமையான அச்சுறுத்தல். இந்த அச்சுறுத்தலை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என எனது உணர்வு சொல்லுகிறது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பது முக்கியமானது என அதில் பதிவு செய்து இருந்தார்.

ஹர்ஷ் வர்தன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், நாங்கள் அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். அவர் ஒரு மூத்த தலைவர் மற்றும் முக்கியமான தலைவரின் மகன். இதற்கு மேல் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் பேச விரும்பவில்லை என தெரிவித்தார். கொரோனாவைரசுக்கு கோவித்-19 என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது.