அவசரம் அதிகம் பகிரவும்! கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை – போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர்!

 

அவசரம் அதிகம் பகிரவும்! கலெக்டர் வேலைக்கு ஆட்கள் தேவை – போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர்!

உடனடியாக ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிவிட்டார்கள் அதிகாரிகள், சபாஷ், எடப்பாடியா கொக்கா என்றெல்லாம் சில்லறையை சிதற விடவேண்டாம். உடனடியாக களத்தில் இறங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் காவல் நிலையத்தில் போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் துரை குணாவுக்கு எதிராக புகார் கொடுக்க, சடுதியில் அவரை கைதும்செய்து விட்டார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் வேட்டுக்குளம் கிராமத்துக்குச் சொந்தமான குளத்தின் 3 ஹெக்டேர் நிலத்தை தனியார் சிலர் 30 வருடங்களாக ஆக்கிரமித்து பயிர் செய்துவருவதை நிறுத்தக்கோரியும், உடனடியாக நிலத்தை மீட்டு குளத்தை தூர்வாரும்படியும் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நடைநடையாக நடந்தார் சமூக ஆர்வலர் துரை குணா. ம்ஹ்ஹும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து மனு கொடுத்தும் துரும்புகூட நகரவில்லை. பார்த்தார் துரை, இது சரிப்படாது என்று நினைத்து உடனடியாக கறம்பக்குடியைச் சுற்றி சுவரொட்டிகள் ஒட்டிவிட்டார். என்னவென்று? ’கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் பணிகளுக்கு பொது அறிவும், சுயமரியாதையும், ஒழுக்கமும் உள்ளவர்கள் உடனடியாக தேவை’ என போஸ்டர் ஒட்ட, விஷயம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றது.

Job vacant for Collector

ஆஹா, உடனடியாக ஆக்கிரமிப்பாளர்களை அகற்றிவிட்டார்கள் அதிகாரிகள், சபாஷ், எடப்பாடியா கொக்கா என்றெல்லாம் சில்லறையை சிதற விடவேண்டாம். உடனடியாக களத்தில் இறங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் காவல் நிலையத்தில் போஸ்டர் ஒட்டிய சமூக ஆர்வலர் துரை குணாவுக்கு எதிராக புகார் கொடுக்க, சடுதியில் அவரை கைதும்செய்து விட்டார்கள். போஸ்டர் ஒட்டிய குற்றத்திற்காக துரையை கைதுசெய்துவிட்டீர்கள், ஓகே, அந்த ஆக்கிரமிப்பாளர்களை என்ன செய்தீர்கள்  என்று வருவாய் அலுவலரிடம் கேட்டதற்கு அவர் சிம்ப்ளாக ஒரு பதில் சொல்லி முடித்துகொண்டார். ”நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் அங்கே பயிர் செய்திருக்கிறார்கள், அறுவடை முடிந்தது நிலத்தைவிட்டு வெளியேறிவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள்”. இதுகுறித்து துரை குணா தரப்பு சொல்லும் குற்றச்சாட்டையும் கேட்டுவிடுங்கள் ”இந்தப் பதிலைத்தான் ஆக்கிரமிப்பாளர்கள் 30 வருடங்களாக சொல்லிவருகிறார்கள்”