அழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா…இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க!

 

அழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா…இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க!

பொதுவாக எல்லோருக்குமே எப்போதும் ஃப்ரெஸ்ஸாக,அழகாக இருக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும்.அதற்காக மெனக்கிடாத ஆட்களே இருக்க முடியாது!

பொதுவாக எல்லோருக்குமே எப்போதும் ஃப்ரெஸ்ஸாக,அழகாக இருக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும்.அதற்காக மெனக்கிடாத ஆட்களே இருக்க முடியாது! அதற்காக விளம்பரங்களில் வரும் அழகு சாதனப் பொருட்களை பலரும் பயன் படுத்துகிறார்கள். பெரும்பாலும் விற்பனைக்கு வருகிற அழகு சாதனங்கள் எவ்வளவு தூரம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணும் என்று சொல்ல முடியாது.

சில பார்லர்களில் இயற்கையான முறைகளில் ஃபேஷியல் செய்வதுண்டு.அது உங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க உதவும்.ஆனால்,அதற்கு அதிக அளவின் பணமும்,நேரமும் ஒதுக்க வேண்டும்.அப்படி பார்லருக்கு போக வேண்டாம் என்று நினைப்பவர்கள்,வீட்டிலேயே பேஷியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க…

தேவையான பொருட்கள்

பால்
அரிசி மாவு
தேன்
பன்னீர்
தயிர்
மஞ்சள் தூள்
கடலை மாவு
எலுமிச்சைச் சாறு
செய்முறை:

1 ஸ்டெப் : முகத்தை cleanse செய்ய வேண்டும்.அதற்கு ஒரு பாத்திரத்தில் 2 tbsp பாலை எடுத்து ஒரு பஞ்சை அதில் நனைத்து உங்கள் முகத்தில் தடவ வேண்டும்  இரண்டு நிமிடதிற்கு அப்புறம் உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.

beauty

2 ஸ்டெப்: முகத்தை scrub செய்ய வேண்டும்.இதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,தேன் மற்றும் பன்னீரை எடுத்து நன்கு கலக்கவும்.பிறகு முகத்தில் நன்கு பூசி கொள்ளவும் பத்து நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவவேண்டும்.

 

beauty

3 ஸ்டெப் : முகத்தை மசாஜ் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் மஞ்சள் தூளை எடுத்து நன்கு கலக்கி முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

curd with turmeric

4 ஸ்டேட்: ஃபேஸ் பேக், ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மஞ்சள் தூள் தயிர் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறை எடுத்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ளவும் இந்த பேஸ்ட்டை நன்கு முகத்தில் பூசிக் கொள்ளவும் 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.இந்த நான்கு ஸ்டெப் கழித்து உங்கள் முகம் பளபளவென்று மின்னுவதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க: உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா…அசத்தலான 5 ஐடியா!