அழகும், சரித்திரமும் கூறும் பிரான்ஸ்!!

 

அழகும், சரித்திரமும் கூறும் பிரான்ஸ்!!

உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் முதலிடத்தில் உள்ளது. பாரிஸ் நகரின் ஒவ்வொரு அங்குலமும், அந்நாட்டின் சரித்திரம் கூறுகிறது

உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பட்டியலில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரம் முதலிடத்தில் உள்ளது. பாரிஸ் நகரின் ஒவ்வொரு அங்குலமும், அந்நாட்டின் சரித்திரம் கூறுகிறது.

ஈபிள் கோபுரம்:

eiffel

ஈபிள் கோபுரம் பாரிஸின் சின்னமாகவும், பிரான்சின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் உள்ளது. பாரிசின் சர்வதேச கண்காட்சிக்கான நுழைவாயிலாக கட்டப்பட்டது. இது பாரிஸ் நகரத்தில் மிக உயர்ந்த கட்டிடமாக அமைந்துள்ளது. இதன் உயரம் 324 மீட்டர் ஆகும்.

சாமோனிக்ஸ்

சாமோனிக்ஸ் பள்ளத்தாக்கு பிரான்சில் பழமையான ஸ்கை ஓய்வு விடுதிகளில் ஒன்றாகும். முதன் முதலில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் இங்கே 1924ல் நடைபெற்றது. இது பிரெஞ்சு ஆல்ப்ஸில் மாண்ட் பிளாங்கிற்கு அருகே அமைந்துள்ளது.

கோர்கெ டு வெர்டன்

france 1

தென்கிழக்கு பிரான்சில் அமைந்துள்ள கோர்கெ டு வெர்டன், ஐரோப்பாவின் மிக அழகான நதி கேனான்களில் ஒன்றாகும். ஆற்றில் பயணம் செய்ய கயாக்ஸை வாடகைக்கு எடுக்கலாம். இது ஐரோப்பாவின் மிகவும் அழகிய சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.

ஃபோன்டெயின்ஃபுல் அரண்மனை

france 2

பாரிஸ்ன் மையப்பகுதியில்  தென்கிழக்கில் அமைந்திருக்கும் ஃபாண்டேனிபுல்யூவின் அரண்மனை. இது  பிரெஞ்சு முடியாட்சிக்கான குடியிருப்புகளாக செயல்பட்டன. இப்போது இது ஒரு தேசிய அருங்காட்சியகம் மற்றும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். இந்த வளாகம் இன்னும் அலங்கரிக்கப்பட்ட கட்டிடங்களுடன் கூடிய அலங்கார கட்டிடங்கள் நிரம்பியுள்ளது.

லுாவர் அரண்மனை மியூசியம்

லியானார்டோ டா வின்சியின்மோனலிசாஉள்ளிட்ட விலைமதிக்க முடியாத பண்டைய ஓவியங்கள் இடம் பெற்றுள்ளது.

டிரயம்பல் ஆர்ச்

france 3

பிரெஞ்சு புரட்சி மற்றும் நெப்போலியனின் போர்களில் பங்கெடுத்து மரணமடைந்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டது.

இவை தவிர, கண்கார்டு சதுக்கம், டைலரி தோட்டம்,  தனித்துவம் மிக்க ஓவியங்கள் நிறைந்த லொரன்ஸரி மியூசியம், பாந்தியன் தேவாலயம், ரோடின் மியூசியம்,  பிரான்ஸ் நாட்டின் தேசிய சபை, கண்கவர் தங்க நிற சிற்ப, ஓவிய வேலைப்பாடுகள் கொண்ட பாரிஸ் ஒபரா, அதனுள் அமைந்துள்ள பிரமாண்டமான பாலே நடனக்கூடம், நெப்போலியன் போனபர்ட்டின் நினைவிடம், ராணுவ அருங்காட்சியகம் என பாரிஸ் நகரின் ஒவ்வொரு அங்குலமும், அந்நாட்டின் சரித்திரம் கூறுகிறது.

 

தேவையான பயண ஆவணங்கள்

** பாஸ்போர்ட்

**விசாஅதிகபட்சமாக ஆறு நாட்களில் கிடைக்கும். விசா மூலம் 90 நாட்கள் இருக்கலாம். ஷெங்கென் விசா மூலம் பிரிட்டன் தவிர ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வர முடியும்.

விமான வசதி

சென்னைபாரிஸ் இடையே நேரடி விமான சேவை உள்ளது. பயண நேரம்10 மணி நேரத்துக்கு அதிகமாகும். இந்தியாவுக்கும், பிரான்ஸ் நாட்டுக்கும் நேர வித்தியாசம்4:30 மணி நேரம்.

எத்தனை நாட்கள்

பாரிஸ் நகரை பொருத்தவரை குறைந்த பட்சம் மூன்று நாட்களில் அவசரமாக சுற்றிப்பார்த்து திரும்பலாம். அவரவர் வசதியை பொறுத்து நாட்களை நீட்டித்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் சுற்றுப்பயணத்தை திட்டமிடலாம். இப்போது ஆன்லைன் முன்பதிவு வசதி இருப்பதால் துல்லியமாக திட்டமிட்டு பயணம் செல்வது சுலபம்.

பாரிஸ் நகரம் பாதுகாப்பான சுற்றுலா தலம். குற்றங்கள் மிகக்குறைவு, போலீசார் ரோந்து பணியில் இடைவிடாது ஈடுபட்டிருந்தாலும் பிக்பாக்கெட் உள்ளிட்ட மலிவான குற்றங்கள் இங்கு அரங்கேறுவது வழக்கம். எனவே, அத்தியாவசியமான அனைத்து ஆவணங்களையும் ஹோட்டல்களில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்ல வேண்டும்.