அழகிரியை சீண்டி பார்க்கும் உதயநிதியின் பேனர்: மதுரையில் பரபரப்பு!

 

அழகிரியை சீண்டி பார்க்கும் உதயநிதியின் பேனர்: மதுரையில் பரபரப்பு!

கருணாநிதி உயிருடன் இருந்த போதே திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரின் மறைவுக்குப் பிறகு  திமுகவில் இடம்பெற முட்டிமோதினார்

மதுரை: மு.க.அழகிரியை வம்பிழுக்கும் தொனியில் உதயநிதி ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக இளைஞரணி சார்பாக மதுரை வடக்கு மாவட்டம் ஆனையூர் சின்ன புளியங்குளம் கம்மாயை தூர்வாரும் பணி  இந்து நடைபெறவுள்ளது. இதில் திமுகவின்  இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதனால் உதயநிதியை வரவேற்கும் வகையில் போஸ்டர்கள், பேனர்கள் என திமுகவினர் அதகளப்படுத்தினர். 

udhay

இருப்பினும் உதயநிதியை வரவேற்க ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அதில், ‘உங்கள் பெரியப்பா மு.க அழகிரியின் கோட்டைக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே வருக வருக’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. 

alagiri

கருணாநிதி உயிருடன் இருந்த போதே திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரின் மறைவுக்குப் பிறகு  திமுகவில் இடம்பெற முட்டிமோதினார். அது நடக்காத நிலையில் தற்போது மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதிக்கான இந்த வரவேற்பு போஸ்டர் அழகிரியை சீண்டி பார்ப்பதாக உள்ளது.