அழகான ரஜினி.. வெறியான ரஜினி.. விவேக் ட்வீட்; ரசிகர்கள் குஷி!!

 

அழகான ரஜினி.. வெறியான ரஜினி.. விவேக் ட்வீட்; ரசிகர்கள் குஷி!!

பேட்ட திரைப்படத்தை பாராட்டி நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை: பேட்ட திரைப்படத்தை பாராட்டி நடிகர் விவேக் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் – ரஜினி கூட்டணியில் உருவாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்தக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

petta

கடந்த 10-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 80களில் கண்ட ரஜினியை மீண்டும் திரையில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக ரஜினி ரசிகர்கள் கூறிவருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் விவேக் ’பேட்ட’ படத்தை பார்த்து விட்டு ”அழகான ரஜினி, ஸ்டைலான ரஜினி, படிக்கும் போது பார்த்த அதே வெறியான ரஜினி, அனிருத்தின் அட்டகாசமான இசை, மிரட்டல் கேமரா ஒர்க்” என்றெல்லாம் பாராட்டி ட்விட்டரில் பதிவு போட்டிருக்கிறார். இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.