அழகாக வேண்டுமா? பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்!

 

அழகாக வேண்டுமா? பார்லர் தேவையில்ல பிரெண்ட்ஸ், வீடே போதும்!

எப்படி முகம் மற்றவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே போல் மற்றவர்களின் கண்களுக்குப் படும்படியான கை மற்றும் கால்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி முகம் மற்றவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதே போல் மற்றவர்களின் கண்களுக்குப் படும்படியான கை மற்றும் கால்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் மாற!

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் படிந்திருந்தால் தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை  சாற்றை தேய்த்து வர  வேண்டும்.  பின்பு  சோப்பு போட்டு குளித்து வர கருப்பு நிறம் மறைந்து விடும்.

skin

தோல் மிருதுவாகி சுருக்கம் நீங்க!

தோல் வறண்டு, சுருக்கமாக  இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி கொள்ள வேண்டும். பின்பு  சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். அதே போல் ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவினால்  உள்ளங்கைகள்  மிருதுவாக மாறும்.

nail

 

நகங்களில் ஆரோக்கியம்!

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து வர நகங்கள் நன்றாக வளரும்.

பாலில் பஞ்சை நனைத்து  நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கும்.

ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.

நகங்களில் எண்ணெய்யை தடவி அது நன்றாக ஊறியபின்  நகத்தை வெட்டும் போது விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட முடியும்.

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். 

பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். 

leg crack

பாத வெடிப்பு பிரச்னையா?

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.

விளக்கெண்ணைய்  ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு 
ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந் நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.