அல்வாவுடன் ஆரம்பித்த பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிந்தது : கமல்ஹாசன் ட்வீட் !

 

அல்வாவுடன் ஆரம்பித்த பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிந்தது : கமல்ஹாசன் ட்வீட் !

2020-21 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் அதிகம் ஆகும் என்றும் தனி நபருக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் வாசித்தார். அதில், 2020-21 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் அதிகம் ஆகும் என்றும் தனி நபருக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். 

ttn

அப்போது, ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி இல்லை என்றும் ரூ.5- 7.5 லட்சம் வரை இருந்தால் 10% வரி செலுத்த வேண்டும், ரூ.7.5 – 10 லட்சம் வரை இருந்தால் 15% வரி செலுத்த வேண்டும், ரூ.10 – 12.5 லட்சம் வரை இருந்தால் 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும், ரூ.12.5 – 15 லட்சம் வரை இருந்தால் 25% வரி செலுத்த வேண்டும் என்றும் அதற்கு மேல் இருந்தால் 30% வரி செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு துறைகளின் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் வாசித்தார். 

ttm

இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உரை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.’ என்று பதிவிட்டுள்ளார்.