அலட்சியத்தால் தொடரும் உயிர்பலி : தண்ணீர் தொட்டியில் விழுந்து 10 மாத குழந்தை உயிரிழப்பு..!

 

அலட்சியத்தால் தொடரும் உயிர்பலி : தண்ணீர் தொட்டியில் விழுந்து 10 மாத குழந்தை உயிரிழப்பு..!

குழந்தை விழுந்ததை அவர்கள் பெற்றோர் யாரும் கவனிக்க வில்லை என்று கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், புங்கம் பட்டி என்னும் கிராமத்தில் லோகேஷ் என்ற 10 மாத குழந்தை வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது, அங்கே இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டியினுள் தவறி விழுந்துள்ளது. குழந்தை விழுந்ததை அவர்கள் பெற்றோர் யாரும் கவனிக்க வில்லை என்று கூறப்படுகிறது. குழந்தை மூழ்கும் அளவிற்கு அதில் தண்ணீர் இருந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

Baby

சிறிது நேரம் கழித்து குழந்தையைக் காணவில்லை என்று பதறியடித்துக் கொண்டு வீடு முழுவதும் குழந்தையைத் தேடியுள்ளனர். வீட்டினுள் இல்லை என்பதால் வெளியே வந்து பார்த்த போது, லோகேஷ் தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. அதன் பின்பு, அவனை வெளியே எடுத்துப் பரிசோதித்ததில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளது என்ற தகவல் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இது குறித்து, அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Sujith

மதுரையில் ரேவதி சஞ்சனா என்னும் 2 வயதுக் குழந்தை, அவள் பெற்றோர்கள் சுஜித் மீட்கப்பட்டானா.. இல்லையா என்று நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கும் கணநேரத்தில் வீட்டினுள் இருந்த தண்ணீர் சேகரிக்கும் ட்ரம்மில் தலைகீழாக விழுந்து உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 4 நாளாகக் குழிக்குள் இருந்த சுஜித்தின் மரணம். அதன் பின், இந்த 10 மாத குழந்தை குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்துள்ளது. இவ்வாறு பெற்றோர்களின் அலட்சியத்தால் தொடரும் இந்த மரணங்கள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. இனிவரும் காலங்களிலாவது பெற்றோர்கள் அலட்சிய போக்குடன் செயல்படாமல், தங்களது குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.