‘அறுவை சிகிச்சை செய்த பிறகும் நோயாளிகளுக்கு நிதியுதவி’…ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த திட்டம் ரெடி!

 

‘அறுவை சிகிச்சை செய்த பிறகும் நோயாளிகளுக்கு  நிதியுதவி’…ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த திட்டம் ரெடி!

ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டதிலிருந்து அதிரடியான பல்வேறு திட்டங்களை அறிவித்து  வருகிறார். 

சந்திரபாபு நாயுடுவின் ஆளும்கட்சியைப் புறந்தள்ளி, பெரும்பான்மையான இடங்களைக்  கைப்பற்றி ஆட்சி அமைத்தார் அம்மாநில முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி.  ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டதிலிருந்து அதிரடியான பல்வேறு திட்டங்களை அறிவித்து  வருகிறார். 

jagan

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி, ஒ.எஸ்.ஆர். ஆரோக்கியஸ்ரீ ஆசாரா உடல் நல திட்டத்தின் கீழ் புதிய திட்டம் ஒன்றை  விரிவுபடுத்தியுள்ளார். அதில், மருத்துவரின் பரிந்துரைப்படி அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு, நாளொன்றுக்கு 225 ரூபாய் வீதம் என்ற கணக்கில் மாதம்  5 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது அறுவை சிகிச்சை முடிந்த 48 மணிநேரத்திற்குள் வாங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுமாம்.  26 சிறப்பு பிரிவுகளில், 836 விதமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

ttn

முதற்கட்டமாக கடந்த 25-ம் தேதி, சத்ய லீலா என்ற பெண்ணுக்கு எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை நேரில் சந்தித்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, 60 நாட்கள் ஓய்வெடுப்பதற்கான  பணத்தை இத்திட்டத்தின் மூலம் நிதியுதவியாக வழங்கினார். 

jagan

மேலும் ஆண்டு வருமானம் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மருந்து செலவுக்கு நிதி அளிக்கும் திட்டம் அவரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதில் டெங்கு உள்ளிட்ட 2,000 வகையான நோய்கள்  இணைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.