அறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது!

 

அறிஞர் அண்ணா-எம்.ஜி.ஆருக்கு பிடித்த மன்னார் ஹோட்டலின் ரகசியம்; அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது!

காஞ்சிபுரத்தில் சங்கர மடத்துக்கு அருகில் சுமார் நூறு மீட்டர் தொலைவில், செங்கழுநீர் ஓடைத் தெரு என்று அழகான தமிழ் பெயர் கொண்ட தெருவில் இருக்கிறது,மன்னார் மிலிட்டரி ஹோட்டல்.தொண்ணூறு இரண்டு வருடங்களுக்கு முன் சுப்புலட்சுமி என்கிற பெண்மணி துவங்கிய உணவகம் இது.

காஞ்சிபுரத்தில் சங்கர மடத்துக்கு அருகில் சுமார் நூறு மீட்டர் தொலைவில், செங்கழுநீர் ஓடைத் தெரு என்று அழகான தமிழ் பெயர் கொண்ட தெருவில் இருக்கிறது, மன்னார் மிலிட்டரி ஹோட்டல். தொண்ணூறு இரண்டு வருடங்களுக்கு முன் சுப்புலட்சுமி என்கிற பெண்மணி துவங்கிய உணவகம் இது.

காலையும் இரவும் இட்லி தோசை, மதியம் கறிக்குழம்புடன் சோறும் விளம்பி இருக்கிறார் சுப்புலட்சுமி. அவரது காலத்துக்குப் பிறகு அவரது மகனான மன்னார் ராஜாவும், அவரது மனைவி தனலட்சுமியும் அந்த உணவகத்தில் பிரியாணியை அறிமுகப்படுத்தினார்கள். அது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் வேர்பிடிக்கத் துவங்கிய காலம்.

arignar anna

அந்த நாற்றங்காலில்.வித்திட்ட அண்ணாதுரையின் விருப்ப உணவகமானது மன்னார் மிலிட்டரி ஹோட்டல். அந்தக் காலத்தில் காலை ஆறுமணிக்கே இங்கே பிரியாணி பரிமாறி இருக்கிறார்கள். அண்ணா காஞ்சி புரத்தில் இருக்கும்வரை இதுதான் அவரது ஃபேவரைட் ஹோட்டல்.தி.மு.க இயக்கம் துவங்கி அண்ணா சென்னை நகருக்கு குடி பெயர்ந்த பின்னும் இந்த பகுதியில் மீட்டிங் என்றால் அண்ணாவின் இரவு உணவு இங்கேதான்.

அண்ணாவின் தம்பிகளுக்கும் அப்படியே! மீட்டிங் முடிந்து அண்ணா இரவு பத்து மணிக்கு மேல் இங்கே சாப்பிட வந்தால் நூற்றுக் கணக்கான அவரது தம்பிகளுக்கும் இரவு உணவு இங்கேதான். ’என்ன மன்னார், மீட்டிங்கவிட இங்க கூட்டம்  இருக்கே’ என்று அண்ணா சொல்வாராம்.

food

அண்ணாவைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதி எம்ஜிஆர் ஆகியோருக்கும் விருப்ப உணவகமாகிவிட்டது மன்னார் மிலிட்டரி ஓட்டல். தொண்ணூறு ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றும் வெற்று நடை போட்டுக்கொண்டு இருக்கும் மன்னார் ஹோட்டலின் ரகசியம் அவர்கள் தரும் பிரியாணியில் இருக்கிறது! பிரியாணி என்பது பாரசீக உணவு.

முகலாயர்களின் காலத்தில்தான் இந்தியாவில் அறிமுகமானது என்று ஒரு கட்சியும், இல்லை,இல்லை அரிசியையும் இறைச்சியையும் ஒன்றாய் இட்டு சமைக்கும் ஊண் சோறு இது.பண்டை தமிழர் உணவே என்று இன்னொரு கட்சியும் வாதிடுகிறார்கள். இதில் நீங்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் உங்களை தன் கட்சிக்கு இழுத்துவிடும் தனித்த சுவை கொண்ட மன்னார் பிரியாணியை நீங்கள் சுவைத்தே ஆக வேண்டும்.

non veg food

மன்னார் மிலிட்டரி ஓட்டலில் அனேகமாக தமிழகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாத ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. அதுதான் பாயா ஃபிரை. ஆட்டுக்கால் பாயா இந்தியாவெங்கும் கிடைக்கும் சாதாரண பண்டம்தான் ஆனால், மன்னாரில் தேங்காய் சேர்க்காமல் கிட்டத்தட்ட ஃபிரை உருவத்தில் ஒரு பாயா தருகிறார்கள், அதையும் அவசியம் சுவைத்துப் பாருங்கள். 

briyani

மன்னார் உணவகத்தை உருவாக்கிய மன்னார் ராஜா சொல்வாராம், பிரியாணி.சாப்பிட்ட கையில் மறுநாள் காலைவரை அதன் மனமிருக்க வேண்டும் என்று! அடுத்த முறை காஞ்சிபுரம் பக்கம் போகும்போது மன்னார் ஹோட்டல் பிரியாணியை ஒரு கை பார்த்திட்டு கிளம்புங்க!