அர்ஜூனனைக் காப்பாற்றிய கிருஷ்ணர் | மகாபாரத கதை

 

அர்ஜூனனைக் காப்பாற்றிய கிருஷ்ணர் | மகாபாரத கதை

நம்முடைய தினசரி நடவடிக்கை  என்றாலும் சரி , நம் வாழ்வில் நடக்கக் கூடிய எந்த ஒரு பெரிய விஷயம் என்றாலும் சரி , இறைவனின் கருணை இருந்தால் தான்  அது நல்ல விதமாக  நடக்க முடியும். ஆனால் பலர் ஏதோ தன்னுடைய முயற்சியினால்  தான் எல்லாமே நடக்கிறது என்று கர்வத்துடன் இருப்பார்கள்.  சாதாரண மனிதனில் இருந்து  இதிகாச நாயகர்கள் வரை இந்த குணம் எல்லோருக்குமே பொதுப்படையாக இருக்கும். 

நம்முடைய தினசரி நடவடிக்கை  என்றாலும் சரி , நம் வாழ்வில் நடக்கக் கூடிய எந்த ஒரு பெரிய விஷயம் என்றாலும் சரி , இறைவனின் கருணை இருந்தால் தான்  அது நல்ல விதமாக  நடக்க முடியும். ஆனால் பலர் ஏதோ தன்னுடைய முயற்சியினால்  தான் எல்லாமே நடக்கிறது என்று கர்வத்துடன் இருப்பார்கள்.  சாதாரண மனிதனில் இருந்து  இதிகாச நாயகர்கள் வரை இந்த குணம் எல்லோருக்குமே பொதுப்படையாக இருக்கும். 

மகாபாரதத்தில் யுத்தம் நடந்த போது, தன் மகன் அபிமன்யுவை கொன்ற ஜயத்ரதனை, சூர்யஸ்தமனத்துக்குள் கொன்று விடுகிறேன் அப்படி அவனை கொல்லாவிட்டால் நான் தீக்குளிப்பேன் என்று சபதம் செய்கிறார் அர்ஜூனன். அர்ஜூனனின் சபதத்தைக் கேட்டு அச்சம் கொள்வதற்கு பதிலாக சந்தோஷப்படுகிறார்கள் கெளரவர்கள். எப்படியும் இன்று மாலைக்குள் உன்னைக் கொல்லவில்லையென்றால் அர்ஜூனனே தீக்குளித்து இறந்து போவான்’ என்று ஜயத்ரதனுக்கு தைரியம் சொல்கிறார்கள். அர்ஜூனனின் சபத்ததை கைக்கூடாமல் செய்வதற்காக அன்று காலையிலிருந்து ஜயத்ரதன், மறைவாகவே இருந்தான்.

arjunan

துரியோதனன், கர்ணன் போன்றவர்கள் ஜயத்ரதனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர். அர்ஜூனனால் ஜயத்ரதனை நெருங்கவும் முடியவில்லை. அவன் இருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் வந்துவிட்டது. 
“என்ன கிருஷ்ணா… சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?’ என்று விரக்தியுடன் கேட்டான் அர்ஜூனன். சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் கிருஷ்ணர். எங்கும் இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். 
“சூரியன் அஸ்தமித்து விட்டான். இனி, அர்ஜூனன் தீக்குளித்து இறந்து விடுவான்…’ என்ற எண்ணத்தில் தலையை நீட்டி வெளியே வர ஆரம்பித்தான். உடன், அர்ஜூனனைப் பார்த்து, “அதோ, ஜயத்ரதன் தலை தெரிகிறது…ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல், அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு…’ என்றார் கிருஷ்ணர்.

இந்த ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். அவர் கோரமான தவம் செய்ததன் பலனாக, இந்த பிள்ளையைப் பெற்றார். அந்த பிள்ளை பிறந்ததும் ஒரு அசரீரி, “உன் புத்திரன் எல்லாராலும் கொண்டாடப்பட்டு, மகாவீரனாக இருப்பான். மிக்க கோபமும், பராக்கிரமும் உள்ள ஒரு வீரனால் இவன் தலை அறுபட்டு மாள்வான்…’ என்றது. இதைக் கேட்ட விருத்தட்சரன், “தன் தவ வலிமையால், யுத்த களத்தில்,  எவன் என் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவனது தலை நூறு சுக்கல்களாக சிதறிப் போகட்டும்…’ என்று சாபம் கொடுத்தார். 

arjunan

இந்த விபரத்தை அர்ஜூனனுக்கு சொல்லி, “உன்னால் அறுபட்டு இந்தத் தலை கீழே விழுந்தால் உன் தலை நூறு சுக்கல்களாக வெடித்து விடும். அதனால், அருகிலுள்ள அவனது தகப்பனார் விருத்தட்சரனுடைய மடியில் அந்தத் தலையைத் தள்ளு…’ என்றார் கிருஷ்ணன். அர்ஜூனனும் அப்படியே செய்தான். 

அந்த சமயம், பூமியில் அமர்ந்து விருத்தட்சரன் சந்தியோபாசனம் செய்து கொண்டிருந்ததால், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை. பிறகு, அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது மடியில் கனமாக ஏதோ இருப்பதைக் கண்டு அதை கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் பிள்ளையின் தலையை எவன் பூமியில் தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கல்களாகும் என்று அவர் கொடுத்த சாபம் அவருக்கே வினையாகிப் போனது. ஆம், விருத்தட்சரனுடைய தலை நூறு சுக்கல்களாகியது. அர்ஜூனன் செய்த சபதத்தை நிறைவேற்ற உதவியதோடு அவனது உயிரையும் காப்பாற்றினார் கிருஷ்ணர்.